பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கட்டிக் கால்வாய் வெட்டும் முயற்சியில் காலிங்கராயன் சோர்வுற்றிருக்கும்போது அவர் தாயார் மகனுக்குத் தைரியமூட்டிப் பணியில் ஈடுபடுத்தினார் என்பது செவிவழிச் செய்தியாகும். 'மகனே நம் வீட்டில் ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன. தயிர் விற்ற பணம் தாவாரம் வரை கிடக்கிறது. மோர் விற்ற பணம் முகடுவரை உள்ளது. அவைகளை எடுத்துக்கொண்டு சென்று தைரியமாக அணையைக்கட்டு; கால்வாயை வெட்டு' என்று காலிங்க ராயன் தாயார் கூறினார்களாம். இவ்வாறு மகனுக்கு ஊக்கமூட்டிய தாயாரின் பெயரைத் தெரிந்து கொள்ள ஆதாரம் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. 'காலிங்கராய வினியோகம்' என்ற வரி கொங்கு நாட்டில் வசூலிக்கப் பட்ட து. பங்காளிகள் பகையா? பங்காளிகளிடம் பகை கொண்டிருந்தார் காலிங்கராயன் என்று சிலர் கூறுவர். அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை . வேட்டுவர்களைக் காலிங்கராயன் வெல்லும் முயற்சியில் எண்ணமங்கலம் சாத்தந்தை குலத்தினர் உதவியுள்ளனர். வெள்ளோடு வெள்ளை வேட்டுவரை அடக்கும் முயற்சியி லும் பாலமடை அம்மன் கோயில் கட்டவும் வெள்ளோடு சர்வலிங்கேசுரன் கோயில் திருப்பணியிலும் வெள்ளோடு கனகபுரம் சாத்தந்தை குலத்தினர் அனைவரும் உதவி யுள்ளனர். எலவமலை சாத்தந்தை குலத்தினர் அணை கட்டும் இடத்திலும் கால்வாய் வெட்டும் இடங்களிலும் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளனர். தான் காடுபிடித்து நாடாக்கி வெள்ளிர வெளிப் பகுதியில் மக்களைக் குடியேற்றிய காலிங்கராயன் வெள்ளோட்டில் இருந்த தன் பங்காளிகளையே குடியேற்றியுள்ளார். இவை அனைத்துக் கும் கல்வெட்டு, பட்டய ஆதாரங்கள் உள்ளன. எனவே தன் பங்காளிகளான சாத்தந்தை குலத்தாரிடம் காலிங்க