பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

24 ராயன் மிகவும் மரியாதை வைத்திருந்தார்; சாத்தந்தை குலத்தினரும் உயர்பதவி வகித்த தம் பங்காளி காலிங்க ராயனைப் பெரிதும் மதித்து வேண்டிய பல உதவிகள் செய்தனர் என்று உறுதியாகத் தெரிகிறது. எனவே பங்காளிகளுக்கும் காலிங்கராயனுக்கும் பகை இருந்தது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. ஆட்சிப்பகுதி கொங்கு நாட்டில் பூந்துறை நாட்டுக்கு உரியனவாய் வெள்ளோட்டை இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்த காலிங்கராயன் பாண்டியர்களின் ஆட்சிப் பிரதிநிதியாகக் கொங்கு நாடு முழுவதையுமே ஆண்டு கொண்டிருந்த கொங்குப் பாண்டியரின் கீழ் அரசியல் அதிகாரியாக விளங்கி னார் என்று அவர் கல்வெட்டுக்கள் வாயிலாக நாமறி கின்றோம். வெஞ்சமாங்கூடல், நெரூர், கொடுமுடி, வெள்ளோடு, இராமநாதபுரம் புதூர், அந்தியூர், திங்களூர், குன்னத்தூர், விசயமங்கலம், சர்க்கார் பெரியபாளையம், எலத்தூர், குடி மங்கலம், பேரூர், கரூர், பாரியூர், மொடச்சூர் போன்ற பல பகுதிகளில் காலிங்கராயனின் கல்வெட்டுக்கள் கிடைப்பதால் ஏறத்தாழ அமராவதி ஆற்றுக்கு வடக்கும் காவிரிக்கும் மேற்கும் பேரூரின் கிழக்கும் கோபி, அந்தியூரின் தெற்கும் இவைகளின் மத்தியப்பரப்பில் உள்ள கொங்கு நாட்டுப் பகுதி முழுவதையும் காலிங்கராயன் தன் அதிகார எல்லைக் குட்படுத்தியிருந்தார் என்று தெரியவருகிறது. தன் காலத்தில் கொங்குநாடு எழிலும் ஏற்றமும் பெற்று விளங்க வேண்டும் என்றெண்ணிக் காலிங்கராயன் செய்த பணிகள் எண்ணிலடங்கா. ஆட்சியின் பொருட்டும் நிருவாகத்தைச் சரி செய்வதன் பொருட்டும் அறக்கொடைகளை நிலை நாட்டும் பொருட்டும் பாண்டியர் தம் ஆணையை நாட்டும் பொருட்டும் நீதி