பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

‘பெயரும் பெருமையும்' .. பட்டப்பெயர் நமது தலைவனின் சிறப்புப் பட்டப்பெயராக அமைந் துள்ள 'காலிங்கராயன்' என்ற பெயர் வரலாற்றுச் சிறப்பு மிக்கது . பழங்கால மன்னர்கள் தம் நாட்டில் சிறப்புற்று விளங்கி யோர்க்கும் தங்கள் அரசியல் அதிகாரிகட்கும் அவர்தம் பணியைப் பாராட்டித் தகுதிக்கேற்ற வகையில் பற்பல பட்டப்பெயர்களை அளித்தனர். எட்டி, ஏனாதி, காவிதி என்பன அவற்றுட் சில பெயர்களாக வரலாற்றில் அறிகின்றோம். பிற்காலத்திலும் இவ்வழக்கம் தொடர்ந்து இருந்து வந்தது. காலப் போக்கில் பட்டங்களாக அளிக்கும் பெயர் கள் பெருகின. இவ்வாறு அளித்த பல பட்டப்பெயர்களுள் 'காலிங்கராயன்' என்பதும் ஒன்று. காலிங்கராயன்-பெயர் உருவாதல் ‘ விரும்பரணில் வெங்களத்தீ வேட்டுக் கலிங்கப் பெரும்பரணி கொண்ட பெருமான்' ஆகிய முதலாம் குலோத்துங்கச் சோழன் கி.பி. 1096 இல் தென் கலிங்கத்தையும் கி.பி. 1112 இல் வடக லிங்கத்தையும் வென்று தன் குடைக்கீழ்க் கொணர்ந்தான். இதில் கி.பி. 1112 இல் அனந்தவர்மனோடு நடைபெற்ற வடகலிங்கப் போர் வெற்றியையே செயங்கொண்டார் பரணியாகத் தரணி போற்றப் பாடினார். குலோத்துங்கன் தன் கலிங்க வெற்றிக்குக் காரணமாக இருந்தவர்களுள் ஒருவனும் சிறந்த சிவபக்தனுமாகிய நரலோக வீரன் என்ற