பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

28 சோழ நாட்டில் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் பற்பல காலங்களில் அரசியல் அதிகாரிகள் காலிங்கராயன் என்ற சிறப்புப் பெயர் பெற்று விளங்கினர். சோற்றால் மடையடைக்கும் சோழ நாட்டில் இப்பெயரோடு விளங்கிய தலைவர்கள் பலர். ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயிலில் உள்ள மதுரையும் ஈழமும் கொண்ட இராசாதிராச தேவனின் 11 ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் 'காலிங்கராயர்' என்ற ஒரு அரசியல் அதிகாரியின் பெயரைக் காண் கின்றோம். பண்பட்ட தில்லையில் கூத்தரசப் பெருமான் ஆலயக் கல்வெட்டில் 'காலிங்கராயர் ஓலை' என்ற பெயரில் ஓர் அரசியல் அதிகாரியின் ஆணை குறிக்கப்பெறுகிறது. திருவரங்கம் கோயில் கல்வெட்டில் காலிங்கராயர் வைக்கிற அகரம்" என ஒரு கல்வெட்டில் காணுகின்றோம். பிறிதோர் கல்வெட்டில் 'காலிங்கராயர் அகரம்' என்றே அது அழைக்கப் பெறுகிறது. அத்திருவரங்கத்திலேயே "உடையார் பெரியபெருமாள் ஆன காலிங்கராயர் கலியுக ராமச் சதுர்வேதிமங்கலம்' என்று அந்தணர்கட்கு ஊர் ஏற்படுத்தியதாக மற்றொரு கல்வெட்டுக் கூறுகிறது. திருவிடைமருதூர்ச் சிவாலயத்தில் உள்ள கோனே ரின்மை கொண்டான் கல்வெட்டில் 'காலிங்கராயன்' என்ற அதிகாரி சாட்சிக் கையொப்பமிட்டுள்ளான். நன்னிலம் தாலூக்கா திருமீயச்சூர் சிவாலயக் கல்வெட்டில் உடையார் காலிங்கராயர்; குலசேகர காலிங்கராயர்' என்று இருவர் குறிப்பிடப்பெறுகின்றனர். பாண்டிய நாட்டில் திருப்பரங்குன்றம் உமையாண்டான் கோயிலில் உள்ள சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டியன் கல்வெட்டி