பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நல்லான் கற்பூரக் காலிங்கராயன்' என்பவரும் அரசியல் அதிகாரிகளாகக் குறிக்கப் பெறுகின்றனர். சம்புவராயர் நாளில் "எழிலாரும் பொழிலார் கச்சி' என்று நற்றமிழ் வல்ல நாவுக்கரசர் பாவுள் போற்றும் காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில் உள்ள 'சகல லோக சக்கரவர்த்தி ஸ்ரீ ராஜ நாராயண சம்புவராயர்' காலத்துக் கல்வெட்டில் “ எயில் கோட்டத்து ஆர்ப்பாக்கக் கிழான் பெருங்கருணை யாளன் திருவேங்கடமுடையான் காலிங்கராயன்' என்ற அரசியல் அதிகாரி சிறப்பிக்கப்பட்டுள்ளார். இக்கல்வெட்டுப் பகுதியிலிருந்து அரசியல் அதிகாரி களுக்கும் (அரண்மனை உள் அதிகாரி, நாட்டு அதிகாரி) படைத்தலைவருக்கும் சிற்றூர்த் தலைவர்கட்கும் காலிங்க ராயன் என்ற சிறப்புப் பெயர் வழங்கி வந்தமை புலனாகிறது. தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் காலிங்கராயன் என்ற பெயர் வழக்கிலிருந்ததை நாம் அறிகின்றோம். காலிங்கராய அரண்மனை அரசியல் தலைவர்கட்கு மட்டுமின்றித் தங்களுக்கு மிக விருப்பமான பிறவற்றிற்கும் காலிங்கராயன்' என்று பெயரிட்டு அரசர்கள் மகிழ்ந்தனர் என்று கல்வெட்டுக்களின் மூலமாக நாமறிகின்றோம். பார் புகழ நாடாண்ட பாண்டியர்கள் தாங்கள் சீர் திகழ வீற்றிருந்து செங்கோலோச்சிய அரண்மனைக்கும் அமர்ந்த இருக்கைக்கும் காலிங்கராயன் என்ற சிறப்புப் பெயரைச் சூட்டியிருந்தனர் என்பதற்கும் சான்றுகள் சில கிடைத்துள் ளன. 'கோமாறபன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ வீரபாண்டிய தேவர்க்கு யாண்டு மூன்றாவது 292 ஆம் நாள் பிரசாதம் செய்தருளின திருமுகப்படி சோழ மண்டலத்துப் பாண்டிய குலபதி வளநாட்டுக் கண்டியூர் கோயில் பள்ளி