பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

யறைக் கூடத்துப் பள்ளிப்பீடம் காலிங்கராயனில் எழுந்தருளி யிருக்க' எனவரும் இத்தொடரால் சோழ நாட்டை வென்ற பாண்டியன் கண்டியூரில் இருந்த தன்னுடைய அரண்மனை யில் ஒருபகுதிக்குக் காலிங்கராயன் என்று பெயர் வைத்த சிறப்பை அறிகின்றோம். 'மதுரைக் கோயில் பள்ளியறையுள்ளாலை பள்ளிப்பீடம் காலிங்கராயனில் எழுந்தருளியிருந்து' எனவரும் குலசேகர பாண்டியன் கல்வெட்டுத் தொடரால் மதுரை அரண்மனை யிலும் ஒருபகுதி இச்சிறப்புப் பெயர் கொண்டு விளங்கிய பெருமையை அறிகின்றோம். சீவல்லபதேவர் காலத்திலும் “மாடக்குளக்கீழ் மதுரைக் கோயில் உள்ளாலை அழகிய பாண்டியன் கூடத்துப் பள்ளிப்பீடம் காலிங்கராயன்' என்று குறிக்கப்பட்டுள்ளது. மதுரோதய வளநாட்டு இராசசிங்கன் குளக்கீழ் இராசேந்திரசோழபுரத்திலும் இதே பெயரில் அரண்மனைப் பகுதி விளங்கியுள்ளது. காலிங்கராய நந்தவனமும் நிலமும் உடையார் பாளையம் சென்னிவனம் சென்னியாண்ட சுவாமி கோயிலில் சுரும்புப் பாடலுக்கு அரும்பு விரியும் அழகிய நந்தவனம் ஒன்று இருந்தது. அந்த நந்தவனம் 'காலிங்கராய நந்தவனம்' என்று கவின் பெயர் தாங்கிச் சிறப்புற்றிருந்தது. அந்த நந்தவனத்தை 50 குழி நிலப் பரப்பில் உண்டாக்கியவர் உடையார்பாளையம் பாளையக் காரர் 'காலாட்கள் தொழ உடையார்' - என்றும் கல்வெட்டால் அறிகின்றோம். திருச்சிமாவட்டம் காவேரிப் பாளையம் கல்வெட்டால் ஒரு நிலத்தின் பெயர் 'காலிங்க ராயன் கொல்லை' என்று அறிகின்றோம். காலிங்கராய நடனமாது காளையார் கோயில் காளீசுவரர் கோயிலில் விழாக் காலத்தில் நடனமாட வந்தாள் ஒரு நங்கை. அவருக்குக்