பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

86 காலிங்கராயன் பாண்டியர் தலைவன் ஆனபின் தம்முடைய பூந்துறை நாடு வளம் பெறும் பொருட்டுப் பவானியில் இடம் தேர்ந்து, இடம் அளிக்க மறுத்த பாளையக் காரன் வெள்ளை வேட்டுவனை வென்று நாட்டு மக்கள் உதவியுடன் காலிங்கராயன் அணை கட்டிக் கால்வாயை யும் வெட்டினார். அதனால் என்றும் அழியாப் பெரும் புகழ் பெற்றார். காலிங்கராயன் அணைகட்டத் தேர்ந்தெடுத்த பவானி ஆறு இலக்கியப் புகழ்பெற்றது. பதிற்றுப்பத்தில் 'சாந்து வரு வானி நீர் மென்மையான சாயலும் தூய்மையும் தண்மையும் உடைய சேரன் இளஞ்சேரல் இரும்பொறையன் திருமேனிக்கு உவமையாகக் கூறப்படுகிறது. கொங்கு நாட்டில் உள்ள ஆறுகளையெல்லாம் தொகுத்துப் பின்வருமாறு கொங்கு மண்டல சதக ஆசிரியர் கூறுகின்றார். * திருமணி தொப்பைபூங் காவேரி வானியும் செய்யநதி தருமணி காஞ்சி பொருநைநள் ளாறொடு சண்முகமும் குருமணி பாலை நதிவாழை காரி குடவந்தியும் வருமணி சண்பகம் சிற்றாறு சூழ்கொங்கு மண்டலமே!' என்பது அப்பாடலாகும். இப்பாடலில் 'கங்கையிற் புனித மாய' காவிரியுடன் இணையாகக் கூறப்படும் பெருமையைப் பெற்று விளங்குகிறது வானியாறு. 'வடகொங்கில் வானியாற்றில்' எனவரும் வேதாந்த தேசிகர் கூற்று வானியாறு வடகொங்கு நாட்டில் பாய்கிறது என்பதைத் தெரிவிக்கிறது. ஏற்கெனவே பூந்துறை நாட்டின் வடக்கு எல்லையாக வானியாறு விளங்கும் தன்மையைக் கண்டோம்.