பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

38 பிங்கல நிகண்டு, திவாகர நிகண்டு போன்ற நிகண்டு களாலும் புகழப் பெற்ற ஆறுதான் பவானியாறு. இவ்வாறு வரலாறு இலக்கியப் புகழ்பெற்ற பவானி ஆற்றில் தான் காலிங்கராயன் அணைகட்டத் தீர்மானித் தார். பழைய கோவை மாவட்டத்திலுள்ள சுமார் 30 கால்வாய்களில் காலிங்கராயன் கால்வாயே முதலாவதாக வைத்துக் கூறப்பட்டது. பவானிக்கு அருகிலுள்ள ஊராட்சிக் கோட்டை மலையை விலைக்கு வாங்கினார். அம்மலையிலிருந்து அணை கட்டுமிடம் வரை உள்ள வழியையும் விலைக்கு வாங்கினார். இதனை மெய்ப்பிக்கும் அடையாளமாக மலையாயிரம் தடம் ஆயிரம்' என்ற பழமொழி ஒன்று ஊராட்சிக் கோட்டைப் பகுதியில் இன்றும் வழங்கு கின்றது. இதிலிருந்து ஊராட்சிக் கோட்டை மலையை ஆயிரம் பொன்னுக்கும் வழியை ஆயிரம் பொன்னுக்கும் அவர் வாங்கிய தாக அறிகின்றோம். அம்மலையில் மிகுதியான கற்களை உடைத்து அவை களைப் பல எருமை வண்டிகளின் மூலமாக அணை கட்டும் பகுதிக்கு எடுத்துக்கொண்டு வந்து அணையைக் கட்டினார் . காலிங்கராயனும் இரண்டு எருமைக் கடாக்கள் பூட்டிய வண்டியில் கல் எடுத்தாராம். அக் கடாக்களுக்கு - இராமன். இலட்சுமணன்' என்று பெயர் வைத்திருந்தார் என்பர். மலையிலிருந்து அணைவரை வரும் வழியில் பல இடங்களில் தளர்ச்சி நீங்கத் தங்குமிடங்களையும் தாகந் தணிக்க நீர் நிலைகளையும் ஏற்படுத்தினார். வழியில் பொரி, கடலை போன்ற தின்பண்டங்களும் ஏராளமாக வைக்கப்பட்டு இருக்குமாம். வேலையாட்கள் அவைகளைத் தின்றுகொண்டே வேலை செய்யலாமாம். காலிங்கராயன் ஏவலாட்கள் மீது கொண்டிருந்த அன்பை இதன் மூலம் அறிகின்றோம். ஊராட்சிக் கோட்டை மலையில் காலிங்க ராடன் மோர் குடித்த இடம், உணவு உண்ட இடம் என்று சில இடங்களை இன்றும் காட்டுகின்றனர். ஆனால் அவை