பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

களைப் பற்றிய கல்வெட்டோ சான்றோ ஒன்றும் அங்கில்லை. இன்றும் காலிங்கராயர் குடும்பத்தின் தனிப் பட்ட உடைமையாக ஊராட்சிக் கோட்டை மலை திகழுகிறது. அணையில் நீர் வழிந்து வரும் கலிங்கில் கற்களை இணைத்து அந்த இணைப்பு நிலையாக நிற்கக் கம்பிகளைக் கொடுத்து ஈயத்தைக் காய்ச்சி ஊற்றி அதனை இணைத் துள்ளார். அணைத் தோப்பின் கிழக்கில் நீர் பாய்ந்து நேராகக் காவிரியில் கலந்து விடாமல் தண்ணீர் அணைக்கு வந்து சேர மிக நீளமான தடுப்புச் சுவரை ஆற்றின் இடையில் கட்டியுள்ளார். அதனால் நீர் தடுக்கப்பட்டு அணையை நோக்கிப் பாய்கிறது. நீர் மிகுதியாக வரும் காலங்களில் தான் அணைத்தோப்பின் கிழக்குப் பகுதியில் பவானியாற்றில் தண்ணீ ர் வரும். கல்வெட்டுக்களில் கொங்கு நாடெங்கும் கொங்குப் பாண்டியர் வீர பாண்டியன், சுந்தரபாண்டியன், குலசேகர பாண்டியன் காலத்துக் கல்வெட்டுக்களில் காலிங்கராயன் பெயர் பொறித்த பல கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் ஒரு சிலவற்றைப் பிற்சேர்க்கையில் இணைத்துள்ளோம். இக்கல்வெட்டுக்களில் உயர் அலுவலராகக் காலிங்க ராயன் குறிக்கப்பட்டுள்ளார். தனிப்பாடலில் வீரபாண்டிய வேந்தமைச்சன் என்ற தொடர் இருப்பதும் கவனிக்கத் தக்கது. காலிங்கராயன் வீரபாண்டியனின் ஆட்சியாண்டு 15 இல் நாள் 129 அன்று கம்மாளர்களுக்குச் சில உரிமைகள் கொடுத் துள்ளார். அக்காலமே அணைகட்டி முடிக்கப்பெற்ற கால மாக இருக்கலாம் காலிங்கராயன் வினியோகம் என்ற வரியை யும் காணுகின்றோம். கொங்கு நாட்டில் பிற்காலத்தில் இப்பெயரில் தலைவர் ஒருவரும் இல்லாததை நோக்கப் பாண்டியர் நாளில் இருந்த