பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமணம் செய்ய ஏற்பாடு செய்யும்போது தடைப்பட்டது என்றும் கால்வாய் வெட்டிச் சபதம் முடிந்தபின் திருமணம் நடைபெற்றது என்றும் கூறுகிறது. 18 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நடையின் அழகை நாமறிய வேண்டுமல்லவா? வமிசாவளியில் உள்ள வாறே அப்பகுதியைக் காண்போம். "பூந்துறை நாட்டிற்கு நாட்டானாய் வெள்ளோட் டுக் குடியிருப்புக்காரனாய் இருக்கும் நாளையில் கங்கை குலம் சாத்தந்த கோத்திரம் காலிங்கக் கவுண்டன் என்கின்ற தன்னுடைய குமாரனுக்குக் கலியாணம் பண்ணவேண்டுமென்று நினைச்சு மாமன் மச்சுனனான பண்ண குலத்தாளி வீட்டிலே பெண் கேட்டுக் கலியாணம் செய்யத் தக்கதாக யோசிச்சு பெண் சம்மதமாகி அந்த ராத்திரி சாப்பிடுகிறதுக்குச் சமையல் பண்ணுகிறவன் வந்து இவர்களுக்குச் சமையல் பண்ணுகிறதுக்கு எந்த அரிசி போடுகிறது என்று கேழ்க்க " அவாள் கம்பு விளைகிற சீர்மையிலே இருக்கிற பேர்களுக்கு எந்த அரிசி என்று தெரியவா போகிறது. பழ அரிசிதானே போடுபோ' என்று சொல்ல அது சேதி மேற்படி காலிங்கக் கவுண்டன் கேட்டு அவாள் வீட்டிலே சாப்பிடாதபடிக்கு இருந்து நெல்லு விளையும்படியாக நீர்ப்பாங்கு உண்டுபண்ணிக் கொண்டு உங்கள் வீட்டுப் பெண் கொண்டு சாப்பிடுகிறோமென்று சபதம் கோரிக் கொண்டு வந்து தன் ஊரிலே வந்து சேர்ந்து மனதிலே தனக்குத் தோணியிருக்கும் நாளையில் இவர் இஷ்ட மான சர்வேஸ்வரரைத் தன்னுடைய அபீஷ்டம் சித்தி யாக வேணுமென்று நினைச்சு இருக்கும் வேளையில் இராத்திரி சொப்பனத்திலே ஒரு விருத்த பிராமண ரூபமாய் வந்து இந்தச் சர்ப்பம் போகிற வழியாக வாய்க்கால் வெட்டி வைக்கச் சொல்லி காரணமாகச் சொப்பனமாச்சுது. அந்தச் சொப்பனமான உடனே கண் விழிச்சுப் பார்க்குமிடத்தில் ஒரு சர்ப்பம் பிரதிட்ச மாக இருந்தது. தான் கண்டு இருக்கப்பட்ட சொப்பு