பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

னத்தைக் கண்டு அறிய வேணுமென்று நினைச்சு வீடுகட்கு வெளியிலே வந்த சமயத்திலே சர்ப்பம் இவனைக் கண்டு முன்னே நடந்தது. அந்தச் சர்ப்பத் தைக் கண்டு தொடர்ந்து போய் இந்த வழியாகப் போகுதென்று அடையாளங்கள் போட்டுக் கொண்டு வருகிறபோது கொடுமுடி சேத்திரத்திலே சர்ப்பம் நின்றது. அந்தச் சர்ப்பம் போன போக்கிலே வாய்க் காலும் வெட்டி வைக்க வேணுமென்று நினைத்துப் பவானி ஆற்றிலே குறுக்கே அணை கட்டி வைக்கவேணு மென் கிறதாக நினைச்சிருந்த சமயத்தில் பவானிக்கூடல் ஸ்தானத்துக்கு மேல் புறத்தில் பவானி ஆற்றிலே சர்ப்பம் குறுக்கே படுத்துக்கொண்டது. அந்த இடத்திலே அணைகட்டி வைக்கவேணுமென்று பவானிக் கூடலுக்கு வடக்கே வூராச்சி மலையும் தடமும் சுத்தக் கிரயத்துக்கு வாங்கி அணை கட்டுகிற சமயத்திலே வெள்ளை வேட்டுவர் என்கிற பாளையக்காரன் அணை கட்டுகிற எல்லை தன்னதென்று சண்டை பண்ணினமையாலே வெள்ளை வேட்டு வரை ஜெயிச்சு அணையும் கட்டி வெகு திரவியங்கள் செலவளிச்சு சர்ப்பம் போயிருந்த அடையாளங்களைப் பிடிச்சு வாய்க்கால் வெட்டிவைச்சு பவானி அணை முதல் கொடுமுடி ஸ்தானத்து அத்து வரைக்கும் முக்காத வழி தூரத்துக்குச் சர்ப்பம் போன போக்கிலே வாய்க்கால் வெட்டின ஏழு காதவழி நடை கோணக் கோணலாக வாக்கியால் வெட்டி வச்சான். அந்தச் சர்ப்பம் போன போக்கிலே வாக்கியால் வெட்டி வச்சுப் பவானி ஆற்றிலே சர்ப்பம் படுத்து யிருந்த இடத்திலே அணையும் கட்டிவிச்ச படியினாலே காலிங்கக் கவுண்டன் என்று பேர் வரப்பட்டுப் பிரசித்திப் பட்டவனாய் இருக்கும் நாளையில் முன்னாலே சபதம் கோரியிருக்கப்பட்ட பண்ணை குலத்திலே தன் பிள்ளைக்குக் கலியாணமும் செய்து கொண்டு அம்ச புருஷனாய் தெய்வ கடாட்சத்தினாலே சம்பத்து நாமதேயமான 'காலிங்கன்' என்கிற நாமதேயமும்