பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கொண்டு காலிங்கராயனுக்கும் அவன் பரம்பரையினர்க்கும் இன்றும் மயிலே குலத்தின் சின்னமாக விளங்குகிறது என்றும் கூறுகிறது. காலிங்கராயனுக்கு வழிகாட்டிச் சென்ற பாம்பின் பெயர் காலிங்கராயன்' என்று இந்நூல் கூறுகிறது. கண்ணபெருமான் அடக்கியது 'காலிங்கன்' என்ற பாம்பையே என்று புராணம் கூறும். இதனை உட்கொண்டு அவ்வாறு குறிப்பிட்டிருக்க வேண்டும். காலம் காலிங்கராயன் அணை கட்டிக் கால்வாய் வெட்டிய ஆண்டு கலியுக சகாப்தம் 2000 என்று வமிசாவளியும் ஆங்கில வரலாற்று நூலும் கூறுகின்றன. இவ்வாண்டு மிகைபடக் கூறலாகவே இருக்கின்றது. ஆனால் அவை இரண்டும் குறிப்பிடும் பரம்பரையினரின் ஆட்சியாண்டு களின் தொகைகளைக் கூட்டிப்பார்க்கும் பொழுது காலம் கி.பி.13ஆம் நூற்றாண்டு தான் வருகிறது. அக்காலமே கல்வெட்டுக்கள் அனைத்திலும் காலிங்கராயன் பெயர் கூறப் படும் காலமாகும். கி.பி.13 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக் களிலே மட்டுமே காலிங்கராயன் பெயரைக் காணுகின் றோம். தனிப்பாடலில் வீரபாண்டிய வேந்தமைச் சன் என்று கூறப்படுகிறது. கி.பி. 1800 இல் எழுதப்பட்ட கைபீது, 582 ஆண்டுகட்கு முன்பு கால்வாய் வெட்டப் பட்டதாகக் 1800இல் கூறுகிறது. கால்வாயைப் பார்வையிட்ட புக்கானன் 400 ஆண்டுகட்கு முன்பு வெட்டப்பட்டது என்று கூறு கின்றார். கல்வெட்டுக்களின் கூற்றுப்படிக் கி.பி.1253 இல் வீரபாண்டியனிடம் அரசியல் அலுவலனாக அமர்ந்த காலிங்கராயன் 12 ஆண்டுக் காலம் முயன்று கி.பி. 1265 ஆம் ஆண்டு இப்பணியை முடித்தான் என்று நம்புவ தற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன. உதவியவர்கள் யார்? வரலாற்றுக் குறிப்பெழுதிய புக்கானன் (1800) காலிங்கராயன் ஒரு செல்வந்தராகவும் செல்வாக்குப் பெற்ற