பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வராகவும் இருந்த காரணத்தினால் தன் சாதி மக்களிட மிருந்து கால்வாயின் தேவைக்கான பணத்தை தீ திரட்டினார்' என்று கூறுகின்றார். இச் செய்தியையும் 'காலிங்கராயன் வினியோகம்' என்ற வரியையும் நோக்க இது உண்மைச் செய்தியாக இருக்கலாம் என்று கொள்ளுதல் வேண்டும். எலவமலை, காலிங்கராயன் பாளையம், குன்னத்தூர் வெள்ளிரவெளி போன்ற பகுதிகளில் காலிங்கராயர் தன் பங்காளிகளான சாத்தந்தை குலத்தாரைப் புதிய ஊர்களில் குடியேற்றியுள்ளார். எனவே அணை, கால்வாய்த் திருப்பணி கட்குப் பங்காளிகளின் துணை இருந்திருக்க வேண்டும் என உறுதியாக எண்ணலாம். பாண்டிய அரசனும் பிற அரசியல் அலுவலர்களும் உதவி செய்தமை குறித்து முன்னர்க் கண்டோம். செவிவழிச் செய்தி கூறுவது போலத் தாயார் தேடி வைத்திருந்த குடும்பச் சொத்தினைக் கொண்டும் காலிங்கராயன் அணை கட்டிக் கால்வாய் வெட்டியிருக்கலாம். ஆனால் வெள்ளோடு, அந்தியூர், பேரூர்க் கல்வெட்டுக்களின் மூலம் காலிங்கராயன் கம்மாளர் எனப்படும் ஆசாரிமார்களுக்குச் சில உரிமைகள் அளித்தமை குறித்து முன்னர்க் கண்டோம். அணை, கால்வாய்த் திருப்பணிக்கு ஆசாரிமார் மிகுதியும் உழைப் பால் உதவி செய்திருக்க வேண்டும்; அதனாலேயே உரிமை களை அம்மக்கள் பெற்றிருக்க வேண்டும் என ஊகிக்க வேண்டியிருக்கிறது. பல்வேறு இன மக்களின் உதவியுடன் சாத்தந்தை குலம் பங்காளிகளின் துணையுடன் நாட்டு நன்மைக்காகக் காலிங்கராயன் இப்பணியைச் செய்து முடித்திருக்க வேண்டும். சாபத்தின் உண்மை என்ன ? செவிவழிச் செய்தியாக வழங்கும் வரலாற்றில் மற்றொரு செய்தி குறிக்கப்படுகிறது. காலிங்கராயன் திருப்பணிக்கு அவனுடைய தாயாதிகளான சாத்தந்தை