பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குலத்தினர் எவ்வித உதவியும் செய்யவில்லை; சிறிய குட்டைக் கொழுவைக்கூடக் கொடுக்க மறுத்தனர். மறுக்கவே காலிங்கராயன் தான் செய்த மாபெரும் பணி முடிந்தவுடன், தனக்கு ஒரு உதவியும் செய்யாத தன் தாயாதிகளான சாத்தந்தை குலத்தினரை அழைத்து, "நீங்கள் இக்கால்வாய்த் தண்ணீரைக் குடிக்கக்கூடாது. இக் கால்வாயிலிருந்து நீர் பாயும் நிலத்தை நீங்கள் உழுது பயிரிடக்கூடாது; அணை பெருகவேண்டும். உங்கள் குடி கருக வேண்டும்” என்று கூறினார் என்பர். இதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை . ஒருவன் ஓர் அறச்செயலைச் செய்கின்றான் என்றால் அவன் வழியினரே, அவன் குடும்பத் தினரே அந்த அறச்செயலின் பயனை நுகர்வதில் பங்கு கொள்ள விரும்பக் கூடாதல்லவா? அதுபோலச் சாத்தந்தை குலத்தாரின் துணையுடன் காலிங்கராயன் செய்த இம்மா பெரும் அறச்செயலில் அவர்கள் வழியினரே பங்கு கொள்வது நன்றன்று; அது பிறர்க்கே முழுவதும் பயன்பட வேண்டும் என்று அணை, கால்வாயைப் பயன்படுத்தாமல் சாத்தந்தை குலத்தினர் ஒதுங்கியிருந்தனர். இதுவே உண்மையாகும். காலிங்கராயர் பல்வேறு அறச்செயல்களைச் செய்தவர்; கோயில்களைக் கட்டியவர்: குளங்களை வெட்டியவர்; நாடெங்கும் வரி விதித்து வசூலித்தவர். பாண்டியர் அரசியல் அலுவலராகவும் ஆற்றல் படைத்தவராகவும் இருந்தவர். எனவே காலிங்கராயன் வழியினர் அவரை எதிர்த்திருக்க முடியாது. அமைதியான ஆட்சிக்காலத்தில் தான் அறச்செயல்கள் நடக்கும். எனவே பிற்காலத்தில் உண்மையறியாமல் சாப வரலாற்றைக் கற்பனையாக நாட்டில் வழங்கவிட்டிருக்க வேண்டும். வெள்ளோடு, கனகபுரம், கவுண்டச்சி பாளையம் கல்வெட்டுக்களிலும், நல்லணவேள் காதல் போன்ற இலக்கியங்களிலும், தனிப்பாடல்களிலும் சாத்தந்தை குலத்தினர் தாங்கள் காலிங்கராயன் வமிசத்தில் வந்தவர் கள் என்று பெருமையாகக் கூறிக் கொள்ளுகின்றனர். எனவே