பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

47 எவ்வகையிலும் அவர்கள் காலிங்கராயனை மதித்துள்ளனர். காலிங்கராயனும் பங்காளிகள் மீது பகைகொள்ளவில்லை என்பதனையே அறிகின்றோம். நாவிதன் கரையும் ஊரும் காலிங்கராயன் அணை கட்டி முடிக்க ஆன 12 ஆண்டு களும் சபதம் செய்து அது முடியும் வரை தாடி வைத்துக் கொண்டிருந்தார். "சீரில் பொலியும் தவம் இருந்து தெய்வ வானி அணைதேக்கி" என்பது பழம்பாடல் பகுதியாகும். அணை, கால்வாய் வேலைகள் முடிந்தவுடன் காலிங்கராயன் மிகுந்த சோர்வினால் அப்படியே படுத்து உறங்கிவிட்டார். அப்பொழுது குடும்ப நாவிதன் வந்து அவர் உறக்கம் கெடாத வகையில் தாடியை மழித்து எடுத்து விட்டான். காலிங்கராயன் விழித்து எழுந்தவுடன் மகிழ்ந்து நாவிதனைப் பார்த்து உன்னைப் பாராட்டுகின்றேன்; உனக்கு என்ன வேண்டும்' என்று கேட்டார். அப்போது தன் பெயர் நின்று நிலவ ஏதேனும் செய்ய வேண்டும் என்று நாவிதன் இறைஞ்சினான். காலிங்கராயன் மகிழ்ந்து காலிங்கராயன் கால்வாயின் முதல் கரையை நாவிதன் கரையென்று நாவினிக்க அழைத்தார். தன் பெயரிட்ட காலிங்கராயன் பாளையம் என்ற ஊருக்கு அருகில் நாவிதன்பாளையம் என்ற ஊருண்டாக்கிச் சருவமானிய மாக அளித்தார். இதனை வமிசாவளியும் பின் வருமாறு நயமான நடையில் நவிலுகின்றது . “ இப்படி வாக்கியால் வெட்டி அணை கட்டி பிள்ளைக்குக் கலியாணம் பண்ணுகிற வரைக்கும் சபதம் கோரி தீட்சை வளர்த்துக் கொண்டுயிருக்கும் சமயத்தில் தெய்வ கடாட்சத்தினாலே மனோபீஷ்டம் நிறைவேறியிருக்கும் சமயத்தில் ஒரு நாசுவன் தீட்சை மயிரை வாங்கிப் போட்டு நிலைக் கண்ணாடியை