பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

51 பாளையம் அருகே காலிங்கராயன் கால்வாயுடனே கலக்கிறது. இக்கால்வாய் சுமார் 675 ஏக்கர் நிலங்களை வளப்படுத்துகிறது. 2. பெரியபட்டம் பரிசோதனை வாய்க்கால் :-நாகம நாயக்கன் பாளையத்தில் காலிங்கராயன் கால்வாய் நொய்யலில் கலப்பதற்காக ஆவுடையா பாறையை நோக்கிப் பாயுமிடத்தில் ஒரு தடுப்பை ஏற்படுத்தி அங்கிருந்து ஒரு கால்வாயைத் தென்மேற்காகக் கொண்டு செல்லுகின் றனர். அது பெரியபட்டம் என்ற ஊரைக் கடந்து செட்டிபுள்ளா பாளையம் என்ற ஊரில் நொய்யலோடு கலக்கிறது. அதற்கும் காலிங்கராயன் கால்வாய் என்றே பெயர் கூறி அழைக்கின்றனர். ஆனால் இந்தப் பெரியபட்டம் கிளைக் கால்வாயைப் பற்றி வேறு சில செய்திகளும் இங்கு வழங்கப் பெறுகின்றன. இக்கால்வாய் 625 ஏக்கர் நிலத்திற்கு நீர் அளிக்கிறது. இதன் நீளம் 1.5.600 மைல் ஆகும். 3. ஆவுடையாபாறை பிரிவு வாய்க்கால் :- ஆவுடையா பாறையில் காலிங்கராயன் கால்வாய் நொய்யலோடு கலக்கு மிடத்திற்கு அருகில் மைல் 56.5.234 இல் கால்வாயை ஒரு கலிங்கின் மூலமாகத் தடுத்துத் தண்ணீரை மேற்கு நோக்கிக் கொண்டு செல்லுகின்றனர். அதற்கும் 'காலிங்கராயன் கால்வாய்' என்றே பெயர் கூறுகின்றனர். இருநூறு ஏக்கர்களை வளப்படுத்தி இக்கால்வாய் 'புதுத்தோட்டம்' என்ற இடத்தில் நொய்யலோடு கலக்கிறது. இதற்குக் 'கல்லுக்கட்டுமடை' என்றும் பெயர் கூறுகின்றனர். 'ஆவுடையபாறைப் பிரிவு வாய்க்கால்' என்பது பொதுப் பணித்துறையினர் பெயர். இதன் நீளம் மைல். பிற்காலத் திருப்பணி செய்த இருவர் வட்டக்கல் வலசு சின்னத்தம்பிக் கவுண்டர் சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் பெருமழை பெய்து வெள்ளப் பெருக்கெடுத்தது. அதன் காரணமாகப் பள்ளங் களில் ஓடிவந்த தண்ணீர் காலிங்கராயன் கால்வாயினுள் புகுந்து பல இடங்களில் கரைகள் உடைந்தன. பொதுப்