பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

52 பணித்துறையினரால் விரைந்து பழுதுபார்க்க முடியாத அளவுக்கு உடைப்பு மிகுதியானதால் உழவர்கள் பெரிதும் துன்புற்றனர். அப்போது வட்டக்கல்வலசில் வாழ்ந்த கொங்கு வேளாளரில் கண்ண குலத்து நிலக்கிழாரான சின்னத்தம்பிக் கவுண்டர் அவர்கள் பெரும்பகுதிக் கால்வாய்க் கரைகளை அடைக்கத் திட்டமிட்டார். தம் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் எடுத் துரைத்தார். வட்டக்கல்வலசுச் சின்னத்தம்பிக் கவுண்டரின் நுண்ணறிவையும் விடாமுயற்சியையும் கண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சின்னத்தம்பிக் கவுண்டருக்கு உதவி புரிந்தார். எங்கு வேண்டுமானாலும் சின்னத்தம்பிக் கவுண்டர் எவ்வளவு மரங்களை வேண்டுமானாலும் வெட்டிக்கொள்ளலாம். பாறைகளை உடைக்கலாம். மண் எடுக்கலாம். யாரையும் உதவிக்கு அழைத்துக்கொள்ளலாம் என்று சாசனம் எழுதித்தந்தார். தம் செல்வத்தாலும், செல்வாக்கினாலும், ஆட்களைத் திரட்டி அரிய முயற்சியால் சின்னத்தம்பிக் கவுண்டர் கால்வாய்க்கரைகளைப் பழுது பார்த்துக் கட்டினார். கால்வாய் முன்பு போலவே நன்றாக அமைந்து தண்ணீர் வந்தது. உழவர்கள் மகிழ்ந்த னர். மணியம் காளியப்ப கவுண்டர் சுமார் 75 ஆண்டுகட்கு முன்பு மணியம் காளியப்ப கவுண்டர் என்பவர் ஆவுடையாறை அருகே தண்ணீர் வீணாகச் சென்று நொய்யலில் கலப்பதைக் கண்டு வருந்தி ஆவுடையாபாறை அருகிலிருந்து கிளைக்கால்வாய் ஒன்றமைத்துப் பாசனத்திட்டம் ஒன்றை அளித்தார். அவரே முன்னின்று அந்தச் செயலை முடித்தார். இன்று அவர் அமைத்த திட்டம் நன்கு செயல்பட்டுப் பல நூறு ஏக்கர்கள் பாசனம் பெறுகின்றன. பெரியபட்டம் பரிசோதனைக் கால்வாய் என்பது இதன் பெயராகும்.