பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அண்ண லும் அறப்பணிகளும் காலிங்கராயன் கொங்கு நாட்டின் அரசியல் தலைவ ராகப் பூந்துறை நாட்டு வெள்ளோட்டில் வீற்றிருந்தபோது கொங்கு நாடெங்கும் பற்பல அறப்பணிகளைச் சிறப்புடன் செய்துள்ளார். குளங்கள் வெட்டுதல், கோயில் கட்டுதல், பழங்கோயில்களைப் புதுப்பித்தல், ஊர் உண்டாக்குதல், மக்களைக் குடியேற்றுதல், மக்களுக்கு உரிமைகள் அளித்தல் போன்ற பல்வேறு நயத்தகு நற்செயல்களைச் செய்துள் ளமையைக் கல்வெட்டுக்களும் இலக்கியங்களும் சிறப்பித்துப் பேசுகின்றன. குளங்கள் வெட்டுதல் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலை என்னும் சங்க இலக்கியத்தில் கரிகாலனைப் புகழும்போது அவன் 'காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கினான்' என்று குறிப்பிடுகின்றார். காவிரிக்குக் கரை கட்டுவித்துக் கல்லணையை உண்டாக்கிய கரிகாலனைப் போலவே கொங்கு நாட்டிலும் பற்பல திருப்பணிகளைக் காலிங்கராயன் செய்துள்ளார். எனவே உருத்திரங் கண்ணனாரின் புகழ்ச்சி காலிங்கராயனுக்கும் பொருந்தும். வீரபாண்டியனின் ஐந்தாம் ஆட்சியாண்டில் கி.பி. 1255 இல் கொங்குக் குறுப்பு நாட்டு விசயமங்கலத்தின் ஒரு பகுதியாகிய வானாகப் புத்தூருக்குக் காலிங்கராயன் சென்றார் அங்கிருந்த வாகைக்குளம் நெடுநாள் பாழ்பட்டுக் கிடப்பதாகக் கேள்விப்பட்டார். அதைப் பழுது பார்க்குமாறு குறுப்பு நாட்டுச் சபையாருக்கு ஆணையிட்டு அதற்கு வேண்டும் பொருட்செலவையும் எதிர்காலத்தில் குளத்தைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் ஆகும் செலவையும் விசயமங்