பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

56 பெருமக்களும் ஜமீன்தார்களும்' என்ற ஆங்கில வரலாற்று நூலும் அதை உறுதிப்படுத்துகின்றது. திங்களூரில் உள்ள பெருமாள் கோயிலைக் கட்டி அதற்குச் சுந்தர பாண்டிய விண்ணகரம்' என்று காலிங்க ராயன் பெயரிட்டதாய்த் திங்களூர்க் கல்வெட்டுக் கூறுகின்றது. நாகமலை என்று சிறப்புப் பெயரையுடைய திருச் செங்கோடு அர்த்தநாரீசுவரர்க்குக் காலிங்கராயன் பல திருப்பணிகளைச் செய்ததாகவும் கொடைகள் அளித்ததாக வும் அறிகின்றோம். இதனைத் திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை சிறப்புடன் குறிப்பிடுகிறது. வெள்ளோட்டின் வடக்கே கவுண்டச்சிபாளையம் அருகேயுள்ள பாலமடை அம்மன் கோயிலை அணை கட்டு வதற்கு முன்பாகக் காலிங்கராயன் கட்டினார். பாலமடை அம்மனை அணைப்பகுதிக்கே எடுத்துக் கொண்டு சென்று பிரதிட்டை செய்யக் காலிங்கராயன் எண்ணியதாகவும் ஆனால் இப்பொழுது அம்மன் கோயில் இருக்குமிடம் வந்த வுடன் அம்மன் பெயர மறுத்து அங்கேயே குடிகொண்ட தாகவும் ஆகவே அந்த அம்மனைக் காலிங்கராயன் தான் கட்டிய அணையை நோக்கி இருக்கும்படிப் பிரதிட்டை செய்ததாகவும் கூறுவர். அக்கோயில் கல்வெட்டில் அம்மன் பெயர் பாலமுடி அம்மன் என உள்ளது. ஊற்றுக்குழியிலேயுள்ள அகத்தூர் அம்மன் ஆலயத்தைக் கட்டியவர் கா லிங்கராயரே! இச்செய்தியைப் பின்வரும் வமிசாவளிப் பகுதி விளக்கும். "ஊத்துக்குழிக்கு வந்து, பின்னர் இராய சமஸ் தானத்திலே தமக்கு கனவிலே பிரசன்னமான இஷ்ட தெய்வத்தைக் கோரி பிரார்த்தனை பண்ணி அகத்தூர் அம்மனென்று நிதர்சனமாக்கப்பட்ட தேவாலயம், சீரணோத்தாரணம் பண்ணி அகத்தூர் அம்மன் என்று