பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

37 பேர் பிரசித்தி படும்படியாய்ப் பூசை நைவேத்தியங்கள் செய்விச்சுக் கொண்டு" எனவரும் பகுதியால் அறியலாம். அகத்தூர் அம்மன் கோயில் கல்வெட்டுக்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன. இன்றும் காலிங்கராயர் வமிசத்தினரின் குலதெய்வம் அகத்தூர் அம்மன் எனப் புகழ்பெற்றுச் சிறப்புடன் விளங்கு கிறது. | இன்னும் பல கோயில்கட்கு நந்தா விளக்கெரிக்கவும் கோயில் திருப்பணிகட்காகவும் திருநாள் கொண்டாடவும் காலிங்கராயன் நிவந்தம் விட்ட தாகக் கல்வெட்டுக்களால் அறிகின்றோம். வேறு பலர் செய்த இவை போன்ற பல்வேறு அறச்செயல்களை முன்னின்று திறம்பட நடத்தியதாகவும் கல்வெட்டுக்கள் முரசறைகின் றன. ஊர் உண்டாக்குதல் காலிங்கராயன் செய்த பல அறச்செயல்களுக்கு மிகவும் உதவியாக இருந்தவர் கச்சிராயன் என்ற பாண்டியர் அரசியல் அதிகாரி ஒருவர். கச்சிராயன் செய்த உதவிகளை எண்ணிச் செய்ந்நன்றி மறவாச் செம்மலாகிய காலிங்க ராயன் அவர் பெயர் என்றும் நாட்டில் நின்று நிலவும் பொருட்டு அவர் பெயரில் கச்சிராயநல்லூர் என்னும் ஊர் ஒன்றை உண்டாக்கினார். கி.பி. 1263ஆம் ஆண்டு வீர பாண்டியனின் பிறந்த நாளன்று கரூர் அருகே உள்ள அவ் வூர்ப் பகுதியில் நெடுநாள் பாழ்பட்டுக் கிடந்த வழிப்போக்கி நத்தத்தைத் திருத்தினார். நன்செய், புன்செய், தோட்டம் இவைகளைச் செப்பனிட்டு அப்பகுதியில் மக்களைக் குடி யேற்றினார். குறுப்பு நாட்டில் குன்னத்தூர் (குன்றத்தூர்) அருகே காடாக இருந்த பகுதியை அழித்து நாடாக்கி வெள்ளிர வெளி என்ற ஊரை உண்டாக்கினார். குன்னத்தூர் இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் கல்வெட்டு இவ்வூரைக் 'காடுபிடித்தழித்துக் கொண்ட வெள்ளிரவெளி' என்று குறிப்பிடுகின்றது.