பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

58| காலிங்கராயன் அணைப்பகுதியில் உள்ள காலிங்க ராயன் பாளையம் என்று வழங்கப்பெறும் நாவிதம் பாளையம் காலிங்கராயன் உண்டாக்கிய ஊரேயாகும். இவ்வூர் அணை நாசுவம் பாளையம், மேட்டு நாசுவம் பாளையம் என இரண்டு பகுதிகளாக வழங்கப்படுகிறது . பொள்ளாச்சி அருகேயுள்ள ஊத்துக்குளியைக் காலிங்க ராயன் தான் முதன் முதலில் மக்கள்வாழும் வண்ணம் ஊராக அமைத்தவர். ஊத்துக்குளி உள்ள காவிடிக்கா நாட்டின் பல பகுதிகள் முன்பு சேரமான் பெருமாள் நாயனாரால் சாத்தந்தை குலத்தாருக்கு மானியமாக விடப்பட்டிருந்தன. ஏற்கெனவே காலிங்கராயனுடைய மாட்டுப் பட்டிகள் அங்கு இருந்தன. வெள்ளோட்டை விட்டுச் சென்ற காலிங்க ராயர் நேராக அங்கு சென்றார். மாடுகள் நீர் குடிக்க ஊற்றுக்கள் தோண்டியுள்ள இடத்தில் ஊர் அமைத்தார். அதனை 'ஊற்றுக்குழி' என் றனர். இன்று ஊற்றுக்குழியில் உள்ள கிணறே அவர் ஏற்படுத்திய ஊற்றுக்குழி' என்பர். அங்கு கல்வெட்டும் உள்ளது. இன்று அப்பெயரே மக்கள் நாவில் மருவி ஊத்துக்குளி என்று வழங்கி வருகின்றது. வேறு ஊத்துக்குளிகளிலிருந்து பிரித்துக் காட்டும் பொருட்டு அதனை ஜமீன் ஊத்துக்குளி என அழைத்தனர். மக்களுக்கு உரிமைகள் அளித்தல் கொங்கு நாட்டில் வேளாளர் வாழுமிடங்களில் கம்மாளர் எனப்படும் ஆசாரிகள் குலத்தார் வாழ்ந்தால் கால்களுக்குச் செருப்பு அணிந்து கொண்டு செல்லக்கூடாது; வீடுகட்குச் சுண்ணாம்பு முதலிய சாந்துகள் எவையும் பூசக் கூடாது; அவர்கள் வீடுகளில் மங்கல காரியங்கள் நடந்தால் அல்லது தீய காரியங்கள் நடந்தால் மங்கலவாத்தியங்கள், பேரிகை முதலியன வாசிக்கக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்துக் கட்டளையிட்டனர். ஆனால் வீரபாண்டியன் ஆட்சியின் 15 ஆம் ஆட்சியாண்டான கி.பி. 1265 முதல் அவர்களுக்கு இத்தடை நீங்கியது. இத்தடையை நீக்கி அவர்கட்கு அரசன் சார்பில் உரிமை அளித்தவர் நமது