பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

என்ற தொடர்கள்! இளமையில் கால்வாய்க் கரையில் எனக்கு அறிவுறுத்தப்பட்ட இச் சொற்களே இவ் வரலாறு உருவாவதற்கு விதையாகியது எனலாம். ஞானிபாளையத்தில் நான்காம் வகுப்பை முடித்து ஈரோட்டில் மூத்த சகோதரியார் திருமதி மீனாட்சி சுப்பராயன் அவர்கள் வீட்டிலிருந்து 'போர்டிங்' பள்ளிக் கூடம் என அழைக்கப்பட்ட லண்டன் மிஷன் சமுதாய நடு நிலைப் பள்ளியிலும், செங்குந்தர் உயர் நிலைப் பள்ளியி லும் படிக்கும்போது ஈரோடு வாட்டர் ஒர்க்சிலும், காரை வாய்க்கால் மைதானத்திலும் சக மாணவர்களோடு காலிங்கராயன் கரையில் விளையாடும்போது மீண்டும் காலிங்கராயன் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. 1959 இல் ஈரோட்டில் ஆசிரியப் பணியுடன் ஆராய்ச்சிப் பணியும் தொடங்கியது. முதல் ஆய்வு காலிங்கராயன் பற்றியது தான். அமரர் என் குருநாதர் எழுமாத்தூர் வேலம்பாளையம் பெரும்புலவர் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் ஆய்வை ஆசி கூறித் தொடங்கி வைத்தார்கள். பழைய நூலகங்கள், ஆவணக் காப்பகம், சுவடி நூலகம், புலவர் இல்லங்கள், கோயில்கள், செவிவழிச் செய்திகள், பெரியவர்களுடன் உரையாடல் மூலம் பல செய்திகள் கிடைத்தன. புலவர்கள் வெ.க. பச்சையப்பன், இரா. சி. சென்னியப்பன் ஆய்வில் உடன் வந்து உதவினர். 1963ல் குமாரபாளையம் அரசினர் பயிற்சிக் கல்லூரி மலரில் 'காலிங்கராயன் கால்வாய்' என்ற முதல் கட்டுரையை எழுதினேன். பலர் பாராட்டினர். நூல் வடிவாக்கத் தூண்டினர். 1966 இல் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கிலும், 1967ல் வெளிவந்த எங்கள் பவானி' என்னும் நூலிலும், கொங்குமலர்' 'கொங்கு நண்பன்' 'கொங்கு' ஆகிய இதழ்களிலும், ஈரோடு தமிழ் இலக்கியப் பேரவை, சுழற்குழு,