பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காலிங்கராயர்தான்! இவ்வுரிமையைச் சோழ மன்னர் அளித்ததாகக் கொங்கு மண்டல சதகம் கூறுகிறது. ஆனால் வெள்ளோட்டுக் கல்வெட்டில் வீரபாண்டியன் காலத்தில் இவ்வுரிமைகள் அளிக்கப்பெற்றதாகத் தெளிவாக உள்ளது. கொங்கு நாட்டின் பிற பகுதிக் கல்வெட்டுக்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன. அக்கல்வெட்டுப் பகுதியைக் கீழே காணலாம். “சுபமஸ்து ஸ்ரீ வீரபாண்டிய தேவர்க்கு யாண்டு 15ஆவது சுபமஸ்து ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்ரவர்த்தி கள் கோனேரிமேல் கொண்டான் காங்கய நாடும் பூந்துறை நாடும் உள்ளிட்ட பற்றில் கண்மாளர்க்குத் தங்களுக்கு நன்மை தின்மைக்குப் பதினஞ்சாவது ஆடி மாதம் முதல் இரட்டைச் சங்கும் ஊதிப் பேரிகை உள்ளிட்டன கொட்டுவித்துக் கொள்வதாகவும் தங்கள் வீடுகளுக்குச் சாந்திட்டுக் கொள்ளவும் தாங்கள் புறப்பட வேண்டுமிடங்களுக்குப் பாதரட்சை கோத்துக் கொள்ளவும் சொன்னோம். இப்படிக்கு நம்மோலை பிடிபாடாகக் கொண்டு ஆசந்திராதித்தவரை செல்வ தாகத் தங்களுக்கு வேண்டுமிடங்களிலே கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொள்க இவை காலிங்கராயன் எழுத்து யாண்டு 15 நாள் 129" இக்கல்வெட்டிலிருந்து காலிங்கராயன் காலம் வரை இந்தத் தடை இருந்ததென்றும் காலிங்சராயன் இந்தத் தடையை உடைத்தெறிந்தான் என்றும் அறிகின்றோம். கொங்கு தந்த வரலாற்று ஆய்வாளர் கோவைக் கிழார் அவர்கள் கோனேரின்மை கொண்டான் என்ற பெயர் சோழன் எனக் கொண்டு இவ்வுரிமைகளை அளித்தவன் சோழன் என்பார். இவ்வாறு பாண்டியர்களும் கோனேரின்மை கொண்டான் என்று பெயர் வைத்துக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். வெள்ளோடு சிவாலயத்தில் கோனே ரின்மை கொண்டான் என்ற பெயரோடு ஸ்ரீ வீரபாண்டிய தேவன் என்ற பெயரும் இணைந்து வருகிறது. கல்வெட்டின்