பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

60 இறுதியில் காலிங்கராயன் கையொப்பமும் உள்ளது. எனவே இவ்வுரிமைகளை பாண்டியர் சார்பில் கொங்கு நாட்டுப் பகுதியில் அளித்து நிறைவேற்றியவர் காலிங்கராயரே என்று அறியலாம். காலிங்கராயன் அளித்த கம்மாளரின் உரிமைகள் எங்கெங்கு மறுக்கப்படுகிறதோ அவ்விடங்களிலும், கம்மாளர் விரும்பும் பிற இடங்களிலும் "கல்லிலும் செம்பிலும் இந்த ஆணையை வெட்டிக் கொள்க” என்று காலிங்கராயன் உரிமை அளித்துள்ளான். இது போன்ற உரிமைச் சாசனங் கள் பூந்துறை காங்கேய நாட்டு உரிமைக்காக வெள்ளோடு சர்வலிங்கேசுவரன் கோயிலிலும் தென் கொங்கு நாட்டு உரிமைக்காகப் பேரூர்ப் பட்டீசுவரர் கோயிலிலும், வடகொங்கில் வடகரை நாட்டு உரிமைக்காக அந்தியூர் செல்லீசுவரசுவாமி கோயிலிலும் குடிமங்கலம் சோழீசுவரர் கோயிலில் தென்கொங்கு நாட்டிற்காகவும் கரூர்ப் பசுபதீசு வரர் கோயிலில் வெங்கால நாட்டிற்காகவும் பாரியூர் அமரபரணீசுவரர் கோயிலில் காஞ்சிக் கூவல் நாட்டிற்காக வும் மொடச்சூர் மெய்ப்பொருள் நாதர் கோயிலில் தலையூர் நாடு முதலிய ஏழு நாடுகளுக்காகவும் கல்வெட்டுக்கள் இருப்பதை இன்றும் காணலாம். இவைகளின் மூலம் காலிங்கராயன் மக்கள் நல் வாழ்க்கை யில் நாட்டம் கொண்டிருந்தவர் என்றும், எளியோர்க்கிரங் கும் இதயம் கொண்டவர் என்றும் அறிகின்றோம். பாண்டிய மன்னர்களின் பண்புடைத் தலைவராக விளங்கிய காலிங்கராயன் மக்கள் நலம் பேணி நாட்டு நலத்தின் பொருட்டு நல்லாட்சி நடத்திய நல்லமைச்சராக விளங்கி அழியாப் புகழ்பெற்று விளங்கினார். அவர் ஆற்றிய அரும்பணிகள் இன்றும், என்றென்றும் அவர் புகழ்பாடும் அழியாக் காவியமாக நின்று நிலவுகிறது. 'மாவிசயம் பெறு காலிங்கன்' என்று கொங்குமண்டல சதகம் கூறுவதால் பாண்டியர் பொருட்டுப் படைநடத்திக் காலிங்கராயன் கவினுறு வெற்றிகளும் அடைந்திருக்க வேண்டும் என்பது புலப்படுகிறது -