பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெய்வமாகக் கொள்ளல் “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்" என்பது வான் புகழ் வள்ளுவரின் வாய்மொழி. கொங்கு நாட்டு வேளாளர்களின் உரிமையுடைய காணித் தெய்வங் கள் பலவும் உலகில் பிறந்து தலைமைப் பண்புகளுடன் பிறர்க்காக வாழ்ந்த பெருமக்களே ஆவர். குடித்தலைவர் களாக விளங்கிக் கோயிலில் குடிகொள்ளும் தெய்வங்களாக அவர்கள் வாழ்வில் உயர்ந்தனர். குன்றுடையாக் கவுண்டர் மக்களான பொன்னரும் சங்கரும் அண்ணன் மார்களாகக் கொங்கு நாடெங்கும் வீற்றிருந்து கொங்கு நாட்டுக் குடிமக்கள் அனைவருக்கும் அருள் தந்து வாழ்வித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது நாமெல்லாம் அறிந்த உண்மையாகும். அப்பிச்சிமார், குப்பியண்ணன், ராவுத்தணன், நாட்டுராயன் முதலிய கொங்கு வேளாளர் களின் காணித் தெய்வங்களும் இவ்வுலகில் பிறந்து இணை யில்லாப் புகழுடன் வாழ்வாங்கு வாழ்ந்த பெருமக்களே ஆவர். காலிங்கராயன் பிறந்த சாத்தந்தை குலத்துக் குல தெய்வமான வெள்ளோடு 'இராசா'வும் இவ்வுலகில் தோன்றிப் பீடுற வாழ்ந்த ஒரு தெய்வீகப் பெருமகனே ஆவார். வெள்ளோடு இராசாக் கோயிலில் தெய்வமாக நின்று என்றும் அந்த இணையற்ற தெய்வத்திருஉரு மக்களை வாழ்வித்து வருகிறது. காலிங்கராய தெய்வம்! எல்லையில்லாப் பெரும் புகழுடன் பாண்டிய மன்னர் படைத்தலைவராகவும் அமைச்சராகவும் விளங்கி, உலகு போற்றும் உயர்பணிகள் பலவற்றைக் கொங்கு நாட்டினர் பொருட்டுச் செய்த நம் கொங்குவேளாள சாத்தந்தை குலக்