பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குரிசில் காலிங்கராயனைப் பிற்காலத்தில் தெய்வமாகவே கொங்கு நாட்டு மக்கள் வழிபட்டனர். காலிங்கராயன் அணையின் இடையில் வளமுடன் அமைந்துள்ள தீவான அணைத்தோப்பு என்னும் சோலையில் காலிங்கராயனுக்குக் கோயில் ஒன்று கட்டியுள்ளனர். ஆண்டுதோறும் அக் கோயிலுக்கு விழாவும் நடத்தி வந்தனர். காலிங்கராயனுக்கு மட்டுமல்ல அவருக்குக் கால்வாய் வெட்ட வழிகாட்டிய பாம்புக்கும் கோயில் அமைத்தனர் என்பதையும் சில சான்று களால் நாம் அறிகின்றோம். அணைத்தோப்பில் ஆலயம் காலிங்கராயன் அணையின் இடையில் உள்ள தீவில் அமைந்துள்ள தோப்பில் உத்தரராயன் கோயில்' என்னும் பெயருடன் கோயில் ஒன்றுள்ளது. கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் கொங்கு நாடு பாண்டியர் ஆட்சிக்குட்பட்டுப் பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையாக இருந்தது. எனவே வீரபாண்டியன் தன் நாட்டின் வடபகுதியாகிய கொங்கு நாட்டிற்கு அரசனைப் போல விளங்கிய அரசியல் அதிகாரி யாகிய காலிங்கராயனுக்கு உத்தரராயன்' என்ற பட்டப் பெயரை அளித்தனன் (உத்தரம்-வடக்கு; ராயன்--ராசன்அரசன்). காலிங்கராயனுக்கு 'உத்தர மந்திரி' என்ற பட்டப் பெயரும் இருப்பதைத் திருமுருகன் பூண்டி முருக நாதர் கோயில் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. பாண்டியனுக்காக ஆணையிடும் அமைச்சர் என்றும் உத்தர மந்திரி என்பதற்குப் பொருள் கொள்ளலாம். இன்று அந்த உத்தரராயன் கோயிலில் உருவ அமைப்பில் சிலைகள் ஒன்றும் இல்லை. உத்தரராயன் என்ற சிறப்புப் பெயரையுடைய காலிங்கராயனுக்கு முன்பு சிலை வடித்துப் பிரதிட்டை செய்து வணங்கியிருப்பர். காலவெள்ளத்தில் அஃது அழிந்துவிட்டது போலும். அக்கோயிலில் உள்ள வேறு ஒரு கடவுளுக்குப் பெத்தாரையன்' என்று பெயர் கூறுகின்றனர். அது