பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

84) இருந்திருக்கும். எனவே அணைமுகப்பில் தலைமதகின் அருகில் வேறு கோயில் அமைந்திருக்க வேண்டும் இச் கோயில் அமைப்பை வமிசாவளியும் ஏற்றுக் கொள்கிறது. வமிசாவளியில் தெய்வீகக் குறிப்பு வமிசாவளி பின்வருமாறு கோயில் கட்டிச் சிலை யெடுத்து வழிபட்ட அச்செய்தியைக் குறிப்பிடுகிறது. "காலிங்கக் கவுண்டன் கட்டியிருக்கப்பட்ட அணை யிலே கவுண்டனையும் சர்ப்பத்தையும் சிலா பிரதிமை ரூபமாகக் கல் வெட்டி வச்சுச் சிலா சாசனமும் எழுதி யிருக்கிறது. அந்த அணை போட்டு இருக்கப்பட்ட இடத்தில் குடிகள் பரம்பரையாய் வருஷப் பிரதியும் உற்சவம் பண்ணிக் கொண்டு வருகிறது. வருஷப் பிரதியும் காலிங்கக் கவுண்டன் பிரதிமைக்குப் பூசை நைவேத்தியம் பண்ணிக்கொண்டு வந்தால் வெள்ளம் வந்து வெள்ளாண்மை விளைஞ்சு கொண்டு வருகிறது இப்படி ஈஸ்வரர் அனுக்கிரகத்தினாலே ரொம்ப மூர்த்தி கரம் உண்டாயிருக்கிறது" இதன்படிக் காலிங்கராயன் பிரதிமைக்கு வருடம்தோறும் வழிபாடு நடத்துவதன் மூலமே தவறாமல் மழை பெய்கிற தென்றும் அதன் மூலமாக வானியாற்றில் வெள்ளம் வந்து பூமி விளைகிறது என்றும் மக்கள் நம்பினர் என்பதையும் காலிங்கராயன் மீது முன்னோராகிய கொங்குநாட்டுக் குடி மக்கள் அளவிறந்த பற்றுக் கொண்டிருந்தனர் என்பதையும் நாமறிகின்றோம். ஆங்கில நூலின் கருத்து காலிங்கராயன் பரம்பரையில் வந்தவர்கள் மட்டுமல்ல, கொங்கு நாட்டு வேளாளர்கள் அனைவரும் காலிங்க ராயனையும் வழிகாட்டிய பாம்பையும் தெய்வமாகவே வழிபட்டனர் என்பதை இந்தியாவின் ஆளுந்தலைவர்களும்