பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

65 பெருமக்களும் நிலக்கிழார்களும்' என்னும் ஆங்கில வரலாற்று நூல் கூறுகிறது. Stone statues of Kalingarayar and the serpent were placed near the anicut, and festivals and Pujas were performed by his descendants and other ryots என்பது அந்நூல் கூறும் பகுதியாகும். பள்ளு நூலில் 'ஈரோடு ஐயனாரப்பன் பள்ளு' என்னும் நயத்தகு நாடக நூலில் காலிங்கராயன் பெற்ற தெய்வத் தன்மை இரண்டு முக்கியமான இடங்களில் விளக்கப்படுகிறது. அப்பள்ளு நாடக நூலை மேடையில் நடித்துக் காட்டியவர் சஞ்சீவி என்பவர். எங்கு? வோளாளர்கள் கூடிய அவையில்; இதைக் கூறுகின்ற ஆசிரியர் புலவர் கரூர் முத்துக்கருப்பனார். அந்த வேளாளர்கள் காலிங்கராயனின் கருணையினால் தான் வாழ்கிறார்கள் என்றும், அவர்கள் வாழ்வும் உழவுத் தொழிலும் மேன்மேலும் ஓங்குவதற்குக் காரணம் அவர் களுக்குக் காலிங்கராயன் கருணை இருப்பதுதான் என்றும் பாடுகின்றார். “காலிங்க ராயன் கடாட்சத்து னாலே சாலவே இந்தத் தரணியில் வாழும் குடியான வர்கள் கூடிய சபையில் வடிவான பள்ளை வந்துமே ஆடிய" தாகவும் சஞ்சீவி தனக்குச் சதுருடன் செம்பொன்னை அவர் கள் கொடுத்ததாகவும் அறிகின்றோம். பள்ளு நூலில் மற்றுமொரு இன்றியமையாத குறிப்பைக் காண்கின்றோம். மழைவேண்டும் என்று ஆண்டானிடம் பணிபுரியும் பள்ளர்கள் வேண்டிக் கொள்ளுமுன் மணிய காரன் வந்து இச்சையாகிய தேவதை தங்கட்கு ஏற்கவே