பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

86 பூசை செய்யுமாறு கட்டளையிடுகின்றான். அதைக் கேட்ட பள்ளர்கள் ஈரோட்டுத் தலத்தில் உள்ள விநாயகன், முருகன், வள்ளி, தெய்வயானை, ஐயனார், தொண்டீசுவரர், வாரணியம்மன், கலியுக வரதர், கமலவல்லித்தாயார், கொங்கிலம்மன், கொல்லி வாய்க் கருப்பன் போன்ற எல்லாத் தெய்வங்கட்கும் பூசை நடத்துகின்றனர். தெய்வத் திருமேனிகட்கும் வழிபாட்டுக்கும் வேண்டிய பொருள் அனைத்தும் விரும்பிக் கொடுக்கின்றனர். வாரணி அம்மனுக்குப் பொன் கலமும், மங்கலகிரிவாச ருக்குத் தங்கக் கிரீடமும் அளிக்கின்றனர். இத்தெய்வங்களை வழிபடுவதற்கிடையில் காலிங்கராயனையும் அவர்கள் மறக்கவில்லை. பள்ளர்களின் வேளாண்மையைச் சிறப்படையச் செய்து குடியை வாழ்விக்கும் தெய்வமல்லவா காலிங்கராயன்! எனவே, 'கங்கை கோத்திரம் காலிங்க ராயற்குக் கண்ட சரமும் உத் தொண்டியும் சாற்றுங்கள்' என்று மணியகாரர் கட்டளையிட, அவ்வாறே பள்ளர்கள் செய்கின்றனர். காலிங்கராயனின் இனத்தவராகிய வேளாளர்கள் மட்டுமல்லர், கொங்கு நாட்டவர் அனைவரும் இதன் மூலம் காலிங்கராயனைத் தெய்வமாக வழிபட்டனர் என்பது விளங்குகின்றது. ஈரோட்டில் காலிங்கராயன் கால் வாய்க் கரையிலேயே இப்பள்ளு நாடகத்தைப் பெற்றுச் சிறப்புற்ற ஐயனாரப்பன் கோவில் இன்றும் இருக்கிறது. பள்ளர் வழிபட்ட கோயில் எது? பள்ளர்கள் வழிபட்ட எல்லாத் தெய்வங்களும் ஈரோட்டிலும் ஈரோட்டைச் சூழ்ந்தும் அருகில் இருப்பனவே! பள்ளர்கள் ஈரோட்டில் வாழ்ந்தமையே அதற்குக் காரணம். எனவே காலிங்கராயனைப் பள்ளர்கள் வாழ்த்தி வணங்கிய காரணத்தால் காலிங்கராயன் கோயில் ஈரோட்டிலும் ஒன்று இருந்திருக்கவேண்டும். அக்கோயில் எங்கிருந்தது என்ப