பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

68 வேட்டுவர் - வேளாளர் போராட்டத்தின் காரணமாக ஆசாரிமார்களின் உரிமைகள் சில பறிக்கப்பட்ட செய்தியை யும் பின்னர்க் காலிங்கராயன் அவர்கட்கு மீண்டும் உரிமை அளித்த செய்தியையும் முன்னரே கண்டோம். காலிங்க ராயன் அவர்களுக்கு உரிமை அளித்த மாபெரும் நன்மைக் காக ஆசாரிமார்கள் தங்கள் நன்றியைக் காட்டக் காலிங்க ராயனுக்கும் வழிகாட்டியதாகக் கருதப்பட்ட பாம்புக்கும் ஈரோட்டில் கோயில் கட்டியிருக்கலாம். வெள்ளோட்டில் உருவச்சிலை வெள்ளோட்டில் உள்ள சருவ லிங்கேசுவரர் கோயிலின் தெற்கு வாயில் முன்மண்டபத்தின் தென்மேற்குத் தூணில் ஒரு தலைவர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அவ்வூர் மக்களும் அக்கோயில் அர்ச்சகர்களும் அச்சிற்பம் காலிங்க ராயன் சிற்பமே என்று கூறுகிறார்கள். காலிங்கராயன் வெள்ளோட்டில் தங்கியிருந்தார் என்பதும் இச் சருவ லிங்கேசுவரன் கோயிலில் பல திருப்பணிகள் செய்து கொடை களும் அளித்துள்ளார் என்பதாலும் மேற்கண்ட செய்தி உண்மையாக இருக்கலாம். பாலமடை அம்மன் கோயிலில் கவுண்டச்சிபாளையம் அருகேயுள்ள பாலமடை அம்மன் கோயில் மகாமண்டபக் கிழக்குச் சுவரின் வெளியே ஒரு கொங்குத் தலைவரின் சிற்பம் உள்ளது. பாலமடை அம்மன் ஆலயத்திற்கும் காலிங்கராயன் கால்வாய்க்கும் உள்ள நெருங்கிய தொடர்பை நோக்க அச்சிற்பம் காலிங்கராயன் சிற்பமாக இருக்கக் கூடும் என எண்ண இடமுள்ளது. கலைமகள் கலைக்கூடத்தில் கொங்குக் கலைக்கூடம் ஒன்று ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டின் அருகேயுள்ள பிராமணப் பெரிய அக்கிரகாரம் என்னும்