பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

69 ஊரில் காலிங்கராயன் கால்வாய்க் கரையில் சிதைந்த ஒரு கோயிலில் இருந்த ஒரு சிலையை அவ்வூர்ப் பொது மக்கள் கலைமகள் கலைக்கூடத்திற்கு அனுப்பினர். அச்சிலையை அவ்வூர்ப் பொது மக்கள் 'காலிங்கராய சுவாமி' என்றே குறிப்பிட்டுக் கூறுகின்றனர். எனவே அந்த அக்கிரகாரப் பகுதியில் காலிங்கராயனுக்குக் கோயில் ஒன்று இருந்தது என்பது திண்ணம். அச்சிலையைத் தேடி எடுத்துப் பாதுகாத்து வரும் கலைமகள் பள்ளிகளின் நிருவாகி செல்வி எம். முத்தையா அவர்கள் நம் அனைவரின் பாராட்டுக்கும் உரியவர்கள் ஆகின்றார்கள். இவைகளின் மூலம் கொங்கு நாட்டவர் அனைவரும் காலிங்கராயனைத் தெய்வமாக வழிபட்டதையும் அணை யில் மட்டுமல்ல, ஈரோடு போன்ற பல இடங்களில் பல மக்களும் கோயில் அமைத்து வணங்கி வரம் பெற்று வாழ்ந்தனர் என்பதையும் நாமறிகின்றோம். இராசாக் கோயிலில் வெள்ளோடு இராசாக் கோயிலில் சாத்தந்தை குலத்தலைவர்கள் சிலருடைய சிற்பங்கள் தூண்களில் அழகிய சிற்பமாக வடிக்கப் பட்டுள்ளன. சில சிற்பங்கள் அடியார் போலவும், சில சிற்பங்கள் அரசியல் அலுவலர் போலவும், சில சிற்பங்கள் அரசர் போலவும் அமைக்கப் பட்டுள்ளன. அச்சிற்பங்களில் ஏதாவது ஒன்று சாத்தந்தை குலச் செம்மல், இராசாவைக் குல தெய்வமாகக் கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்த வள்ளல் நம் காலிங்கராயன் சிற்பமாக இருக்க வேண்டும். கல்வெட்டுக் குறிப்புக்கள் ஏதும் இல்லாத நிலையில் அவைகளில் எந்தச் சிற்பம் காலிங்கராயனுக்கு உரியது என்று நம்மால் அறிய முடியவில்லை .