பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிறப்பு இவைகளையெல்லாம் தொகுத்து மண்டல சதகங் களாகப் பாடிச்சென்றுள்ளனர். அவையெல்லாம் மிகச்சிறந்த வரலாற்றுண்மைகள் நிறைந்த நூல்களாகும். சோழ மண்டல சதகம், தொண்டை மண்டல சதகம், மகதமண்டல சதகம், பாண்டிமண்டல சதகம் முதலியன அவ்வகையில் தோன்றிய சதக நூல்களாகும். ஆனால் கொங்கு நாட்டிற்கு மூன்று சதக நூல்கள் இருக்கின்றன. கார்மேகக் கவிஞர் பாடிய 'கொங்குமண்டல சதகம்' அச்சில் வெளிவந்துள்ளது. அதனைத் திருச்செங்கோடு தி. அ. முத்துசாமிக் கோனார் முதலில் பதிப்பித்துள்ளார். வாலசுந்தரக் கவிராயர் பாடிய கொங்குமண்டல சதகத்தை வேலம்பாளையம் பெரும் புலவர் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் அச்சிட்டார். அவைகள் இரண்டுடன் கம்பநாதர் பாடிய கொங்குமண்டல சதகத்தையும் சேர்த்துப் பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தினர் மூன்று கொங்குமண்டல சதகங்களையும் ஒன்றாக வெளியிட்டுள்ளனர். கார்மேகக் கவிஞரின் பாடலில் காவிரியில் கலக்கும் பவானியில் அணைகட்டிப் பூக்கள் விரியும் புகழ்மிகு வயல் களுக்குப் பாய்ந்து நொய்யலில் கலக்கும் கால்வாய் வெட்டிய செயல் புகழப்படுகிறது. "காவிரி யோடு கலக்குறு வானியைக் கட்டணைநீர் பூவிரி செய்களுக் கூட்டிநற் காஞ்சி புகுதவிசை தேவர்கள் சாம்பவர் பாவாணர் எல்லாம் தினம்மகிழ மாவிச யம்பெறு காலிங்க னும்கொங்கு மண்டலமே!" எனப்படும் பாடல் காலிங்கராயன் புகழினைக் கவினுறச் சுட்டுகின்றது. சென்னிமலையாண்டவர் பிள்ளைத்தமிழ் மேல்கரைப் பூந்துறை நாட்டின் தலைமைத் தலமாக விளங்கும் சென்னிமலைக்குப் புராணம், யமக அந்தாதி,