பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காதல், பிள்ளைத் தமிழ் போன்ற பல பிரபந்தங்கள் உள்ளன. சென்னிமலையாண்டவர் பிள்ளைத்தமிழைப் பாடியவர் வெள்ளோட்டில் வாழ்ந்த குந்தாணி சாமிநாதக் கவிராயர் ஆவார். அந்நூலில் தாலப்பருவப் பாடல் ஒன்றில் காலிங்கராயன் கால்வாய் வெட்டியதன் நோக்கத்தையும் வெட்டிய முறையையும் கூறுகின்றார் அதன் ஆசிரியர். உலகில் பாவம் நம்மைவிட்டு நீங்கவும் பல காலமாக வரும் வழிவழிப் பெருமை சிறந்து விளங்கவும் விரிந்து பரந்து செல்லுகின்ற காவிரியாற்றின் புகழ் உலகில் மேன் மேலோங் கவும் சிறந்து விளங்கும்படியாகத் தவமிருந்து தெய்வத் தன்மை பொருந்திய பவானியாற்றில் காலிங்கராயன் அணை தேக்கிக் கால்வாய் வெட்டியதாகக் கூறுகின்றார் சாமிநாதக் கவிஞர். அவர் கூறும் சுவையான பாடலைப் பாருங்கள்! “பாரில் பவம்விட் டொழிந்தகலப் பலகால் நியமம் பண்பிலங்கப் படரும் தென்கா விரிப்பெருமை படைக்கக் கொங்கு மிகச்செழிக்கச் சீரில் பொலியும் தவமிருந்து தெய்வ வானி அணைதேக்கிச் சிறுகால் வீச வானுறங்கச் சில்லை ஒலிக்கத் தண்டலைகள் பூரித் தெழுந்த செழுந்தீம்பால் போதமுனிவர் சிவயோக புனிதஞ் செய்ய நீதிசெயும் புகழோன் குலம்பேர் பெறவிளங்கும் சாரித் திரப்பூந் துறைநாடாள் சைவா தாலோ தாலேலோ சதுமா மறைசூழ் சிரகிரிவாழ் தலைவா தாலோ தாலேலோ!