பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

15 வெள்ளோடு சாத்தந்தை குல நல் லண கவுண்டர் பற்றிச் சுவாமிநாதக் கவிராயர் பாடிய நூல் நல்லணவேள் காதல் என்பது. அந் நூலில் அவர்தம் குடிப்பெருமை கூறுமிடத்துப் பவானி ஆற்றைக் கொண்டு ஐந்து காத நீளத் துக்குக் கால்வாய் வெட்டிய காலிங்கராயன் மரபினர் அவர் என்று பெருமையாகக் கூறப்படுகிறது. "வானிநதி யைக்கொண்டு வாய்க்கால்ஐங் காதவழி தானுயர்வாய்க் கொண்டுபோய்த் தான் நடத்தும் மெய்க்குலத்தோன்' என்பது அந்நூல் பகுதியாகும். பூந்துறைப் புராணம் நாடு நகரச் சிறப்புக்களுடன் ஓரிடத்தின் வரலாற்றுப் பெருமைகளையும் புராணச் சிறப்புக்களையும் உயர்வு நவிற்சிகளுடன் பலபடப் புகழ்ந்து பாடும் நூல் புராணம் ஆகும். பூந்துறைப் புராணம் என்பது அவற்றுள் ஒன்று. காளியண்ணக் கவிராயர் பாடிய இப்பூந்துறைப் புராணத்தில் இரண்டு இடங்களில் காலிங்கராயன் கால்வாய்ச் செய்தி சுட்டிக் கூறப்படுகிறது. "..................... வானி முகூர்த்தமிடக் கால்வாய்கள் முந்திவயல் பாயும்' என்பது பூந்துறைப் புராணப் புகழ் வரிகள எகும். வனமும் வயலாகும் காலிங்கராயன் கால்வாய் பற்றிய தனிப்பாடல்கள் பல கிடைத்துள்ளன. காவிரியாறொடு கலக்கும் பவானீ ஆறானது இடையிலேயே மடங்கும் வண்ணம் வீர பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் அமைச்சராக