பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மங்காத கீர்த்தி காலிங்கராயனின் வழித்தோன்றலாகச் சாத்தந்தை குலத்தில் தோன்றி விளங்கிக் கனகபுரத்தில் வாழ்ந்து கிழக்கிந்தியக் கம்பெனியாரிடம் சிறப்புப் பெற்றுப் பெரு நிலக் கிழாராகவும் புகழ்பெற்ற கிராம நிருவாகியாகவும் வாழ்ந் தவர் கனகபுரம் பழனிவேல் கவுண்டர் மகன் குழந்தைவேல் கவுண்டர் ஆவார். அவர் பாலமடை அம்மன் கோயிலில் திருப்பணி செய்தவர். புலவர்கள் பலரை ஆதரித்தவர். அவரைப் பற்றிய சில தனிப்பாடல்கள் கிடைத்துள்ளன. அப்பாடல் ஒன்றில் காலிங்கராயன் பெருமை பலபடப் புகழ்ந்து கூறப்படுகிறது. சூரிய சந்திரர் உள்ளவரை காலிங்க ராயன் கால்வாய்ப் பெருமை நின்று நிலவும் என்ற குறிப்பு இப்பாடலில் காணப்படுகிறது. வானி அணைகட்டி வாய்க்கால்ஐங் காதம் வழிநடந்து பானும் தியும் உள் ளமட்டும் கீர்த்தி படைத்தவன்நீ தானவன் காலிங்க ராயன் பழனிவேல் தந்தைசுதா வானின்ற கீர்த்தி குழந்தைவேல் என்றிடும் மன்னவனே நாட்டுப்புறப் பாடல் காலிங்கராயன் கால்வாய் உள்ள ஊர்களில் கால்வாய் அமைப்பு, நிர்வாகம்பற்றிப் பல பாடல்கள் பாடப்படு கின்றன. அவற்றுள் ஒன்று காலிங்கராயர் வரத்தினால் அணை கட்டுவித்தார். குரங்கன்பள்ளம், ஈரோடு பெரும் பள்ளம் ஆகிய இடங்களில் பாலங்கள் கட்டுவித்தார். பல அதிகாரிகள் கால்வாய் நிருவாகத்தில் இருந்தனர். அவர் கட்குச் செய்க்கு 5 வள்ளம் கொடுக்கவேண்டும். அதிகாரி களின் ஆணைப்படியே நீர் பாய்ச்சவேண்டும். இல்லாவிடில் அபராதமும் தண்டனையும் உண்டு என்று கூறுகிறது.