பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சீர்மிகு காலிங்கராயர் வழித்தோன்றலாகத் தோன்றிய ஊத்துக்குளி ஜமீன்தார் நற்பண்புகளின் நாயகர் அன்புரு வாகிய அமரர் திருமிகு அகத்தூர் முத்துராமசாமிக் காலிங்கராயர் அவர்களால் இந்த வரலாறு பாராட்டப் பெறும் பேறு பெற்றது. அவர்களின் அன்புத்துணைவியார் ஊத்துக்குளி ஜமீன் தாரினி அருள் உருவாகிய அன்பு அன்னை திருமதி ருக்மணி காலிங்கராயர் அவர்களும், அவர்கள் மக்களும் இந்நூல் வெளிவர நல்லூக்கம் அளித்து உதவி செய்தனர். காலிங்கராயன் கால்வாய் வரலாற்று நூலை வெள்ளோடு இராசாக்கோயில் குடமுழுக்கு விழாவில் வெளியிடக் குழுவினர் அன்புடன் அனுமதி அளித்தனர். நூல் நன்கு வெளிவர திருவாளர்கள் ஓ.எஸ். ரங்கசாமிக் கவுண்டர், கே.சி. சுப்பையா, கே. சண்முக ராமசாமிக் கவுண்டர், எஸ்.கே. கிருஷ்ணசாமி சகோதரர்கள், பி. சுப்பிரமணியம், அய்யாசாமிக் கவுண்டர் ஆகியோர் அரிய ஆலோசனைகளை வழங்கினர். தென்முகம் வெள்ளோடு உலகபுரம், கனகபுரம், தேவணம் பாளையம் கரைப் பெருமக்கள் வரலாற்று நூல் வெளிவருவதில் மிகவும் ஆர்வம் காட்டினர். கலைமகள் அருங்காட்சியகப் பட்டயங்கள் சிலவற்றைப் பார்வையிட கலைமகள் நிருவாகி செல்வி முத்தையா அவர்கள் அனுமதியளித்தார்கள். பேராசிரியர் முனைவர் எ. சுப்பராயலு கே. ராஜன் ஆகியோர் அரிய ஆலோசனைகளை வழங்கினர். இந்நூலை வெளியிடத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் திருமிகு ச. அகத்தியலிங்கம் அவர்கள் அன்புடன் அனுமதி அளித்தார்கள். இந்நூலை விரைவில் அச்சிட எல்லா ஏற்பாடுகளையும் விரைந்து செய்து உதவியவர்கள் சென்னை மாருதி அச்சக