பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

80 வெள்ளோட்டில் சருவலிங்கர் கோவில்கட்டினான் அங்கும் மேலும் மேலும் கனகபுரம் குளங்கள் வெட்டினான் குன்னத்தூரில் மங்கலத்தில் நீரைத்தேக்கினான் குண்டு குழிகளில்லா சாலைகளை நிறுவிக்காட்டினான்! வீரபாண்டி ஏரியின் நீர் இவன்புகழ் சொல்லும்-ஊரில் வேலையற்ற கொடியவரை இவன்பலம்வெல்லும் ஆரவாரம் எதுவுமில்லா ஆட்சி யமைத்தான்--அன்பால் அனைத்துமக்கள் உள்ளத்திலே மாட்சிமைபெற்றான்! பவானிமுதல் ஆவுடையார் பாறைவரையுமே- இவன் பாத்திகட்டி நாற்றுவளர் பாசனம் தந்தான் அவன் இலையேல் காலிங்கன் கால்வாய் ஏது?-அது அற்புதமாய் வளைந்துசெல்லும் அழகினைஓது! நாவிதனைக் கூடநன்றி யோடுநோக்கினான் - மக்கள் நலம்பெறவே திட்டமிட்டுப் பசுமையாக்கினான்! பூவிதழின் மென்மை உள்ளம் காலிங்கன் உள்ளம் அதோ பொங்குது பார் காலிங்கன்கால் வாயினில்வெள்ளம்!