பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வெளிநாட்டார் குறிப்புக்கள் காலிங்கராயன் கால்வாயின் அமைப்பு, அணையின் தன்மை , அதன் சிறப்புமிக்க பொறியியல் திறன், சிறப்புத் தன்மை, அதன் பெருமை, வரலாற்றுத் தொன்மை ஆகியவை வெளிநாட்டார் பலரை மிகவும் கவர்ந்துள்ளது. கி.பி. 18, 19 ஆம் நூற்றாண்டில் கொங்குப் பகுதிக்கு வந்த பல வெளிநாட்டினரும் பிற நாட்டு அரசியல் அலுவலர் களும் பொறியியல் நிபுணர்களும் ஆட்சித் தலைவர்களும் காலிங்கராயன் கால்வாய் குறித்துச் சுவையான முக்கியத் தகவல்களை எழுதி வைத்துள்ளனர். சுவார்ட்சு (Swartze) புக்கானன் (Dr. Bhuchanan) மெக்கென்சி (Lt. colonel colin Meckanzie) ரௌட்ட ன் (Wroughton) ஹன்னான் (Hannan) OLLITUTT (Colonel Wedderburn) 9116 GÖNGLÓ (Arundels ICS) LO IT GOL. Csilor (Colonel Montgomerie) மீடு பென்னி குக் (Mead Penny Cuick) அட்ரி (Awdry) LOTT 86 (General Morgan) சர் ஆர்தர் காட்ட ன் (Sir Arthar cotton) போன்ற பலரின் பயனுடைய குறிப்புக்கள் பழைய வரலாற்றுச் செய்திகளைக் கூறுவதுடன் எதிர்காலப் பாசனத்திட்டங்களுக்கும் இன்றியமையாத பல கருத்துக் களைத் தருகின்றன. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்கட்கும் மைசூர்த் தலைவர்கட்கும் நடைபெற்ற கொங்கு நாடு