பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

821 பற்றிய உரிமைப் போரில் காலிங்கராயன் கால் வாய்ப் பகுதி பெரிதும் இடம் பெற்றிருந்தது. இக் கால்வாயின் பெரும் பகுதி இப்போர்களினால் அழிந்து சிதைந்து விட்டது என்றறிகிறோம். பல ஆங்கில வரலாற்று நூல்களிலும் மாவட்டக் கெசட்டியர்களிலும் அரசாங்க நிருவாக அறிக்கைகளிலும் காலிங்கராயன் கால்வாயைப் பற்றிய அக் காலத்திய பல வரலாற்றுச் சான்றுகள் விரிவாகக் கிடைக் கின்றன. சுவார்ட்சு தமிழ் நாட்டிற்குக் கிறித்தவ சமயத்தைப் பரப்பும் பணிக்கென வந்த பல பாதிரிமார்கள் கல்வியைப் பரப்பும் பணியையும் மருத்துவப் பணியையும், தமிழ் இலக்கியப் பணியையும், இலக்கண ஆய்வையும் செய்து தமிழ் நாட்டிற்கு அரிய பல தொண்டுகள் செய்ததை நாடு நன்கறி யும். அவர்களில் பலர் வரலாற்றுச் செய்திகளையும் குறித்திருக்கின்றனர். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தஞ்சை, மைசூர் வரலாற்றோடு மிகத் தொடர்புடைய சுவார்ட்சு பாதிரியார் (1726-1798) கொங்கு நாட்டின் பல இடங்களைப் பார்த்துக் குறிப்பெழுதி வைத்துள்ளார். அவர் 1779 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7 ஆம் நாள் பவானிக் கும் ஈரோட்டிற்கும் வந்துள்ளார். 1769 இல் முதல் மைசூர்ப் போர் முடிந்து ஐதர் அலியும் ஆங்கிலேயரும் 11 ஆண்டுக் காலம் (1780 வரை) நட்புறவோடு இருந்த காலம் அது. அப்போது காலிங்கராயன் கால்வாயைப் பார்த்துப் புகழ்ந் துள்ளார் சுவார்ட்சு பாதிரியார். புக்கானன் நான்காம் மைசூர்ப் போர் 1799 இல் முற்றுப் பெற்றது. அவ்வாண்டு ஏற்பட்ட சீரங்கப்பட்டணம் வீழ்ச்சியில் (4.5-1799) பெருவீரனாகிய திப்பு மறைந்தான். அவன் மறைவிற்குப் பின் கொங்குநாடு முழுவதும் ஆங்கிலேயர்