பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

83 கைக்கு மாறிவிட்டது. உடனடியாகக் கொங்குநாடு இரண்டு மா நிலங்களாகப் பிரிக்கப்பட்டது. நொய்யலாற்றின் தெற்கே ஒரு பிரிவையும் நொய்யலாற்றின் வடக்கே ஒரு பிரிவையும் அமைத்தனர். தென் பிரிவிற்குத் தாராபுரமும், வட பிரிவிற்குப் பவானியும் தலைநகரங்களாக அமைக்கப் பட்டன. 6-7.1799 இல் வடபிரிவிற்குக் கேப்டன் மாக்ளியாட் டும் (Captain Colonel W. Macleod) தென் பிரிவிற்கு ஹர்டிசும் (Hurdis) முதல் ஆட்சியாளர்களாக நியமிக்கப் பட்டனர். இக்காலத்தில் தான் கிழக்கிந்தியக் கம்பெனியார் டாக்டர் புக்கானன் என்ற ஆங்கில வரலாற்றாசிரியரைக் கொங்கு, கருநாடக, மலையாள நாடுகளுக்கு அனுப்பி அப் பகுதிகள் பற்றிய செய்திகள் எல்லாவற்றையும் ஆய்ந்து அறிக்கை அளிக்கும்படி நியமித்தார்கள். டாக்டர் புக்கானன் கோவை மாவட்டம் முழுவதையும் மைசூரையும் சுற்றிப் பார்த்து விரிவாக, “சென்னையிலிருந்து மைசூர் கன்னடம் மலபார் வழியாக யாத்திரை" (Journey from Madras through Mysore Canara and Malabar) என்ற அருமையான நூலொன்றினை எழுதியுள்ளார். 1800 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தன் யாத்திரையைத் தொடங் கிய புக்கானன் 1800 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி ஈரோட்டிற்கு வந்துள்ளார். ஈரோட்டில் தான் காலிங்க ராயன் கால்வாயைப் புக்கனான் பார்த்து மிக மகிழ்ந்திருக் கின்றார். அதன் வியத்தகு வேலைப்பாட்டைப் பார்த்து மெய்மறந்து நின்று விட்டார். பின் அதன் வரலாற்றினை யும் இம்மாபெரும் பணியைச் செய்து முடித்த காலிங்கராயன் வரலாற்றையும் கேட்டறிந்தார். தன் குறிப்பில் ஈரோடு நகரத்தைப்பற்றியும் தான் கண்டு மகிழ்ந்த காலிங்கராயன் கால்வாயைப் பற்றியும் குறிப்பிடுகின்றார். அப்பகுதியைக் காண்போம். "பவானியிலிருந்து புறப்பட்டு ஈரோட்டுக்குப் பக்கத்தில் ஓடுகிற கால்வாய் ஒரு சிறந்த வேலைப் பாடுள்ள கால்வாய். இதன் நீளம் 15 மணி