பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

85) பொழுது எண்ணற்ற கல்வெட்டு, செப்பேட்டுச் செய்திகளை யும், பாளையக்காரர்களின் பரம்பரை பற்றிய செய்திகளை யும், ஓலைச்சுவடிகளையும், பிற எண்ணற்ற புராண, இலக்கிய வரலாற்றுச் செய்திகளையும் பொருள்களையும் பல மொழிகள் தெரிந்த ஆட்களைக் கொண்டு கம்பெனியார் உதவியின்றி அவர் சொந்தப் பணத்தில் ஏறக்குறைய ரூ 15,000 செலவில் தொகுத்து வைத்தார். அவைகளில் காலிங்கராயன் பரம்பரையில் வந்த குமரசாமிக் காலிங்க ராயர் தம் பரம்பரைபற்றி எழுதிக் கொடுத்த குறிப்பும் ஒன்றாக இருக்கின்றது. காலிங்கராயனைப் பற்றியும் கால் வாயைப் பற்றியும் பல அரிய குறிப்புக்களை நாம் அதில் காணலாம். அதன் நகல் சென்னை அரசினர் பழஞ்சுவடிச் சாலையில் இன்றும் உள்ளது. அதன் தலைப்பு "Calinga Ray Gauunden pattagar of uootoocoolie in Malabar" TOUT உள்ளது. அந்த ஆவணம் முழுமையாக இந்நூலின் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளது. ரௌட்டன் பவானி ஆற்றைப் பற்றியும் காலிங்கராயன் கால்வாயைப் பற்றியும் ரௌட்டன் 1845 ஆம் ஆண்டு பல சுவையான புள்ளி விவரங்களைத் தருகின்றார். “காலிங்கராயன் அணை கடல் மட்டத்திலிருந்து 534 அடி உயரம். நொய்யலில் காலிங்கராயன் கால்வாய் கலக்குமிடம் 412.48 அடி உயரம். இடையில் உள்ள தூரம் 32 மைல். பவானியிலிருந்து தெற்காகவும் தென்கிழக்காகவும் மைலுக்கு 3.79 அடி தாழ்வாகக் கால்வாய் ஓடுகிறது. காலிங்கராயன் கால்வாயின் நீளம் ஏறக்குறைய 57 மைல். கால்வாய் நீர் 8866 ஏக்கர்களுக்குப் பாய்கிறது. காலிங்கராயன் கால்வாயில் 1840 மதகுகள் இருக்கின்றன. ஒரு மதகிலிருந்து செல்லும் நீர் 4.8 ஏக்கர் பாய்கிறது. மதகுகள் மிகமிக அதிகமாக இருக்கின்றன. பல இடங்களில் அவைகள்