பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

86 அடுத்தடுத்து மிகவும் நெருக்கமாகவும் இருக்கின்றன. அதனால் புது மதகுகள் எதுவும் ஏற்படுத்த முடிவ தில்லை . கால்வாயின் 1,2,3,6,9,16 ஆம் மைல்களில் பல மண் மதகுகள் இருக்கின்ற ன. 3,9,15,25,34,36, 39,41, 47ஆம் மைல்களில் காட்டாறுகள் வந்து கால்வாயோடு கலக்கின் றன.” ஹன்னான் காலிங்கராயன் கால்வாயிலுள்ள சில குறைகளையும் சுட்டிக் காட்டுகின்றார் ஹன்னான். - “கால்வாய் முழுவதிலும் நேரடியாகவே வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச வசதியாகப் பல மதகுகள் இருக் கின்றன. இந்த மதகுகளின் எண்ணிக்கையைக் குறைத்துச் சிறு கிளைக்கால்வாய்களை அமைத்து நீர் பாய்ச்சினால் இன்னும் ஏராளமான நிலங்கட்கு நீர் பாய்ச்ச முடியும். இக்கால்வாயிலுள்ள மிகப் பெரிய குறைபாடு அது மிகப் பெரியதாக இருப்பதே என்று குறிப்பிடுகின்றார். "தொடக்கத்தில் 30,000 ஏக்கர்கள் பாயவேண்டிய தற்கு மேல் தண்ணீர் வருகிறது; ஆனால் கால்வாயின் கடைசியில் மிகக் குறைந்த தண்ணீரே செல்கிறது. வாய்க்கால் பெரியது. ஆனால் அதனால் அடையும் பயனோ மிகக் குறைவு" வெட்டர்பர்ன் இவர் ஓர் அற்புதமான திட்டத்தைத் தந்துள்ளார். "30,000 ஏக்கர்களுக்கு மேல் பாயக்கூடிய அளவு தண்ணீர் அணையிலிருந்து விடப்படுகிறது. ஆனால் பெரும்பகுதித் தண்ணீர் வீணாகிறது"