பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

88 காலிங்கராயன் கால்வாயின் மதகுகள் கட்டப்பட்டிருக் கின்றன. சமீபத்தில் கடுமழை பெய்தது. அதன் காரணமாகக் கால்வாயின் முதல் 7 மைலுக்குள்ளாகவே இருக்கும் 17 மதகுகள் உடைத்துக் கொண்டன. பவானியில் பிற அணைகள் 1850 ஆம் ஆண்டு சர் ஆர்தர் காட்டன் என்பவர் பல திட்டங்களை அளித்துள்ளார். மாண்ட் கோமரியும் (1828) மீடு பென்னிகுக் அட்ரி குழுவினரும் (1878) மார்கனும் (1883) காலிங்கராயன் அணையையும் கால்வாயையும் பார்வையிட்டனர். பவானியாற்றில் பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களை நிறை வேற்றுமாறு பரிந்துரை செய்தனர். சத்தியமங்கலத்தின் மேற்கே 4 ஆவது கல்லில் பவானி யாற்றைத் தடுத்து அணை கட்டினால் தாராபுரம், பல்லடம் தாலூக்காப் பகுதியில் 50, 000 ஏக்கர் நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சலாம் என்று மாண்ட் கோமரி குறிப்பிடு கின்றார். இத்திட்டம் பொதுப்பணித் துறையில் மேல் பவானித் திட்டம்' (Upper Bhavani project) என அழைக்கப்பட்டது. இது பின்னர்க் 'கீழ் பவானித் திட்டம்" (Lower Bhavani project) எனப்படும் திட்டமாக நிறைவேற்றப்பட்டது. கீழ்பவானிக் கால்வால் 1952 செப்டம்பர் மாதம் பூர்த்தி ஆயிற்று. பாசனம் பெறும் நிலம் 2,07,000 ஏக்கர்கள். பவானி ஆற்றில் பல்வேறு தடுப்புக்களை (கலிங்குகளை) ஏற்படுத்தினால் பல ஆயிரம் ஏக்கர்களுக்குப் பாய்ச்சும் வண்ணம் நீர் கிடைக்கும் என்று கூறினர் அட்ரி குழுவினர். அட்டபாடி என்னும் அமைதிப் பள்ளத்திலிருந்து வரும் பவானியைத் தடுத்து மாயாறு என்னும் பள்ளத்தாக்கினிடை யில் போளுவாம்பட்டி அருகே அணை கட்டவேண்டும் என்றார் மார்கன்.