பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

92) சேரமான் பெருமாள் காலத்தில் காவடிக்கா நாட்டுப் பகுதியில் காலிங்கராயன் குடும்பத்தினருக்குக் கொடை யாகப் பூமி அளிக்கப்பட்டிருந்தது. அந்நிலத்தில் மாட்டுப் பண்ணை இருந்தது. ஏராளமான மாடுகள் அங்கு இருந்தன. மாடுகள் தண்ணீர் குடிக்க ஊற்றுக் குழிகள் தோண்டி யிருந்தனர். அப்பகுதிக்கே காலிங்கராயன் குடும்பத்தினர் குடியேறினர். குல தெய்வமாம் அகத்தூர் அம்மனை எடுத்துக் கொண்டு தன்னுடன் வந்த பங்காளிகள் பலருடன் ஊற்றுக் குழிப் பகுதியில் குடியேறி ஆலயம் கட்டி அரண்மனை அமைத்துப் பண்டைய அரசர்போல் காடு கொன்று நாடாக்கிக் குளம் தோண்டி வளம் பெருக்கி நல்லாட்சி புரிந்து நாடு காத்தனர் காலிங்கராயன் மரபினர். வீரபாண்டியன், சுந்தர பாண்டியன், குலசேகர பாண்டியன் ஆகிய பாண்டிய மன்னர்கள் காலத்தில் அவர்கள் அலுவலராகிய காலிங்கராயர் பரம்பரைக்கு நல்ல மதிப்பு இருந்தது. பாண்டியர் ஆட்சி மறைந்து ஒய்சளர் ஆட்சி கொங்குப் பகுதியில் ஏற்பட்டபின் காலிங்கராயன் குடும்பத்திற்கு ஏனைய பட்டக்காரர், பாளையக்காரர்கள் தங்களுக்கு அளிக்கும் மதிப்புக்களையும் மரியாதைகளையும் பரம்பரைப் பாளையக்காரர் அல்லாத காலிங்கராயர் குடும்பத்திற்கு அளிக்கக்கூடாது என்று கூறினர். இதைக் கண்டு மனம் பொறுக்காத காலிங்கராயர் பரம்பரையினர் காவடிக்கா நாட்டுப் பகுதிக்குச் சென்று விட்டனர். இதனைக் காலிங்கராயர் கைபீது பின் வருமாறு கூறுகிறது. - இப்படிக் காலிங்கக் கவுண்டன் என்கிற பேர் பிரசித்திப் பட்டவர்களாய் பலாட்டியனாய் வெள்ளோட்டு பூந்துறை நாட்டாதிபத்தியம் ஆண்டு வரும் நாளையிலே கொங்கு இருபத்து நாலு நாட்டுக்கும் பட்டக்காரர்களாய் இருக்கப்பட்டவர்கள் சரி இருப்பும்,