பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

97 படையெடுத்துக் கொண்டு சென்று மைசூருக்காகப் போராடி வென்றார். உள்ளம் உவந்து 8 கலசங்களுடன், தங்கப் பல்லக்கும், விலைமதிக்க முடியாத ஆடையணிகளும், 9 கிராமங்களில் 750 பொன் வரிச்சலுகையும் அளித்தார். அப்போது காலிங்க ராயரிடம் 5000 காலாட்படையினரும் 5000 குதிரை வீரர் களும் இருந்தனர். ஒரு கடகம் யானைப் படையும் இருந்தது. இவரும் இவருக்குப் பின்னர் வந்தவர்களும் ஆனைமலையில் யானைகள் பிடித்து மைசூர் அரண்மனைக்கு அனுப்பி வைத்துக் கொண்டும், அரசர்களுக்கு வேண்டிய காலத்தில் உதவி செய்து கொண்டும் வாழ்ந்தனர். ஆனைமலையையும் மாச்சி நாயக்கன் குட்டையையும் காவல் காத்து வந்தனர். இவ்விடங்களின் வரி வசூல் உரிமைகைளும் இவர்கள் வசமே இருந்தன. எனினும் அரசர்கள் மாறும்போது பாளையக் காரர்களுக்குச் சில தொல்லைகள் இருந்தன. இக்காலத்தில் காவல் படையிலும் பாதி அழிந்து விட்டது. 26 அம் பாளையக்காரர் கோழிக்கோடு அரசர்மீது போர் தொடுத்துத் தோல்வியடைந்த போதும் ஆனை மலை மீதுள்ள உரிமையை விடவில்லை. அவர் காலம் வரை வரி வசூலிக்கும் உரிமை இருந்தது. 27, 28 ஆம் பாளையக்காரர்கள் காலத்தில் ஐதர் அலியின் படைகள் கொங்கு நாட்டில் கொள்ளையடித்தன, கொலைகள் புரிந்தன. வரி வசூலிக்கும் உரிமைகள் அனைத்தும் எல்லாப் பாளையக்காரர்களிடமிருந்து பறிக்கப்பட்டன. கி.பி. 1769 முதல் 1799 ஆம் ஆண்டு வரை அதிகாரத்திலிருந்த குமாரசாமிக் காலிங்கராயர் காலத் திலும் ஐதர் அலியின் மகன் திப்பு சுல்தானின் தொல்லைகள் மிகுந்தன. எனவே, திப்புவை ஒழிக்க அவர் கிழக்கிந்தியக் கம்பெனியாரோடு சேர்ந்து கொண்டார். குமாரசாமிக் காலிங்கராயரைப் போலவே மற்றக் கொங்கு நாட்டுப் பட்டக்காரர்கள் பெரும்பாலும் திப்புவின் தொல்லைகள்