பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொறுக்க மாட்டாமல் திப்புவை ஒழிக்க ஆங்கிலக் கிழக்கிந்தி யக் கம்பெனிக்குப் பணம், படை போன்றவைகளை அளித்து எல்லா உதவிகளையும் செய்தனர். அனைவரும் 'கும்பினி சர்க்கார் அதிகாரம்' நாட்டில் நிலைக்கத் துணை புரிந்தனர். இதற்கான பல சான்றுகள் சென்னை அரசினர் பழஞ்சுவடிச் சாலையில் இருக்கின்றன. இறுதியில் திப்புவின் ஆட்சி ஒழிக்கப்பட்டபோது, தம் பகுதியில் வரி வசூலிக்கும் உரிமை யைக் குமாரசாமிக் காலிங்கராயர் பெற்றார். ஆனால் வசூலில் 10 இல் 7 பங்கைக் கம்பெனிக்கு அளித்துவிட வேண்டிவந்தது. 10 இல் 3 பங்கையே காலிங்கராயர் பரம்பரையினர் வைத்துக் கொள்ளலாம் என்ற ஒப்பந்தம் இருந்தது. 30 ஆம் பாளையக்காரர் முத்துக்குமாரசாமிக் காலிங்கராயர் நாளிலும் அவ்வாறே நடந்தது. ஜமீன் எல்லைக்குள் 19ஆம் நூற்றாண்டில் 10 கிராமங்கள் அடங்கி யிருந்தன. 10,600 ரூபாய் வசூல் ஆயிற்று. அரசுக்கு 4393 ரூபாய் அளிக்கப்பட்டது. இது பிற்கால நிலை. 31ஆம் பாளையக்காரர் முத்துக்கிருஷ்ணசாமிக் காலிங்க ராயர் 1832 இல் பிறந்தார். அவர் பட்டத்திற்கு வந்தவுடன் ஆனைமலை, மாச்சி நாய்க்கன் குட்டை போன்ற இடங்களில் சில பகுதிகளை விலைக்கு வாங்கினார். அங்கு மாளிகை களையும் கட்டினார். இவர் சிறுவராய் இருக்கும்பொழுதே இவர் தாயார் நஞ்சையம்மாள் தன் சேமிப்புப் பணத்தைக் கொண்டு அம்பராம் பாளையத்தில் ஒரு பெரிய மாடி வீட்டைக் கட்டினார். அது பிற்காலத்தில் தங்கும் சத்திர மாகப் பயன்படுத்தப்பட்டது. இவர் 23-4-1874 ஆம் ஆண்டு காலமானார். அடுத்து 32 ஆம் பாளையக்காரராகச் சிவசுப்பிரமணிய திருமூர்த்திக் காலிங்கராயர் பட்டத்திற்கு வந்தார். ஜமீன் காரியங்களில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். சில புதுக்கிராமங்களையும் விலைக்கு வாங்கினார். தமிழில் மிகப் புலமை கொண்ட அவர் ஆங்கிலத்தையும் தனியாக ஓர் ஆசிரியரிடம் கற்றார். வேதாந்த ஆராய்ச்சியில்