பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இயல் - 1
பழங்காலம் முதல் பிரிட்டிசு ஆட்சி தோன்றிய காலம் வரை பண்டைக்காலம் பற்றிய புறச்சான்றுகள்

வரலாற்று மூலங்களின் குறைபாடுகள்

இந்தியாவிலுள்ள பல மாவட்டங்களின் பழைய வரலாறு பற்றிய உறுதியான செய்திகள் மிகக் குறைவாகவே உள்ளன. மெய்ப்பொருளியல், காவியம், நீதி, கணிதம், சிற்பம், இசை, நாடகம், சிறப்பாகச் சமய ஆராய்ச்சி அல்லது யோகப் பயிற்சி, மெய்ப்பொருட் சிந்தனைகள், மெய்ப்பொருள் ஆய்வு என்பனவற்றில் இந்தியர்கள் விருப்பமுடையவர்களாயிருந்த போதிலும் வரலாற்றைப் பற்றி அவர்கள் ஒரு சிறிதும் கவலைப்படவில்லை என்பது பேருண்மையாகும். ‘ஹிஸ்டரி’ என்னும் மேனாட்டுச் சொல்லின் மூலப்பொருள் ‘ஆராய்ச்சி’ என்பதுதான். ஆனால், இந்துக்கள் (இந்தியர்கள்) ஆராய்ச்சி புரிய ஒருபோதும் அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. (இது பற்றிக் கருத்து வேறுபாடு உண்டு - ந.ச.) இந்திய வீரவரலாற்றுக் காவியங்களில் அல்லது புராணங்களில் ‘ஆராய்ச்சி’ என்னும் பெயரில் போற்றத்தக்க செய்தி எதுவும் இல்லை. சில காரணங்களால் இந்தியாவிற்குட்பட்ட பகுதிகளில் எழுதப்பட்டு அவற்றின் உரிமையெனப் போற்றப்படும் வரலாறுகளே இந்தியாவில் தோன்றிய வரலாறுகளாய் இருக்கின்றன. அவை காஷ்தீரின் ராஜதரங்கினி[1], இலங்கையின் மகாவமிசம்[2] என்பன. உண்மையில் இந்நூல்களில் கவிதைக் கற்பனைகளும், விவரங்கள் பற்றிய நுணுக்கங்களில் தெளிவின்மையும் மிகுதி. ஆயினும், மொத்தத்தில் அவற்றை வரலாற்றுச் சார்புடையவை என்று ஏற்றுக் கொள்ளலாம். இந்தியாவில் வழிவழித் தோன்றிவந்த கற்பனைத் தத்துவங்களின் ஆட்சியால்


  1. ராஜதரங்கினி - ராஜாக்களின் ஒடை, கி.பி. 1748இல் எழுதப்பட்டது.
  2. மகாவமிசம் (வடமொழி வம்சா) பெருங்கோ மரபு கி.பி. 459, 477க்கு இடையே எழுதப்பட்டது.