பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91 கால்டுவெல்


குறைச்செயல்கள் ஒழுங்குடையனவாகவும் துணிவுள்ளனவாகவும் இருந்தன. இவர்களின் தகுதிகள் சரியானவையாய் இல்லை. ஏனெனில், ஐரோப்பாவிலும் சரி, தென்னிந்தியாவிலும் சரி அயல் நாட்டு எதிரிகளை, மிக்க முயற்சியுடன் எதிர்த்தனர் என்று சொல்லப்படுகின்ற அயலார், உண்மையில் வேற்று நாட்டவரல்லர். அந்தந்த நாடுகளின் அரசுரிமைக்கு உரியவர்களே அவர்கள். ஸ்காட்டுலாந்து பீடபூமியிலும் ரைன் நதிக்கரையிலும் இருந்த பாளையக்காரர்கள் திருநெல்வேலிப் பாளையக்காரர்களைப் போல் மத்திய அரசாங்கத்தின் ஆட்சிக்குட்படும் வரை உள்நாட்டு ஒழுங்கும் முன்னேற்றமும் ஒரு சிறிதும் நிலைநிறுத்தப்படவில்லை.

மதுரை நாயக்கர்களின் வரலாற்றிலிருந்து நான் கண்ட திருநெல்வேலியுடன் சம்பந்தப்பட்ட மற்ற நிகழ்ச்சிகள் வருமாறு:

‘அரிய நாயக்க முதலி நாட்டில் அமைதியை நிலை நாட்டியதும் நாயக்க அரசனாகிய குமார கிருஷ்ணப்பன் (அல்லது கிருஷ்ணம்மா) தானே நாட்டை கைப்பற்றிக் கொண்டு பாளையக்கோட்டைக்குக் கிழக்கே ஒரு நகரத்தை ஏற்படுத்தி, ‘கிருஷ்ணபுரம்’ என்று தன் நினைவாக அதற்குப் பெயர் வழங்கினான் என்று சொல்லப்படுகிறது. இந்தச் செய்தியை உள்நாட்டுச் சான்றுகள் ஆதரிக்கவில்லை. இந்தக் கிருஷ்ணாபுரம் கோவில் மயிலேறும்பெருமாள் என்ற முதலியாரால் கட்டப்பட்டதெனத் தோன்றுகிறது. இவன் முதலில் சைவனாய் இருந்து பிறகு கிருஷ்ணனை வழிபட்டு அவன் தாசனாக - வைணவ பத்தனாக - மாறினான். இக்கோவிலின் வேலைபாடுகள் பேரழகுடையவை. கிருஷ்ணப்பாவின் புதிய நகரம் நிறுவிய வேலை வெற்றிகரமாக நடைபெற்றதை அறிந்து மேற்குத் திசையில் அதேபோன்ற மற்றொரு நகரமும் ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது கடையம் கிருஷ்ணாபுரம் (கடையத்தருகே இருக்கின்ற கிருஷ்ணாபுரம்) என்று வழங்கப்பட்டது. இது தென்காசிக்கும் பிரம்மதேசத்திற்கும் இடையே அமைந்துள்ளது. கிருஷ்ணப்பன் 1573 இல் இறந்தான். (நெல்சன் பக். 105).

‘திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் இப்போது இன்னவையென்று கண்டுபிடிக்க இயலாத சில காரணங்களால் திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் எட்டயபுரத்திலுள்ள வலிமைமிக்க பாளையக்காரன் ஒருவன் மற்றப் பாளையக்காரருடன் சதிக் கூட்டத்தில் சேர்ந்து அவன் தலைமையில் அந்த அரசனை எதிர்த்தான். இராமநாதபுரப் பாளையக்காரனாகிய சேதுபதி, எல்லாப் பாளையக்காரர்களுக்கும் தலைவன், எனவே இக்கலகக்காரர்களை