பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93 கால்டுவெல்

அருகில் தவிர மதுரை திருநெல்வேலி மாவட்டங்களில் பல ஆண்டுகள் வரை புலியே இல்லை என்ற செய்தியிருப்பதால் இது குறிப்பிடத்தக்கது. 1700 இல் புலிகள் கடற்கரை ஓரமாக அதிகமாய் வசித்து வந்தன என்பதால், அக்காலத்தில் அப்பகுதியில் மக்கள் மிகக் குறைவாய் இருந்தார்கள் என்பதும் இந்நாளைப்போல் அந்நாளில் ஒழுங்குபடுத்தப்பட்ட வழிகள் இல்லை என்பதும் தெரிகின்றன.

நாயக்கர்களின் பட்டியல்

டெய்லரும் நெல்சனும் பின்பற்றி வந்த நம்பகமான செய்திகளின்படி மதுரை நாயக்க அரசர்களின் பட்டியலும், அவர்கள் பட்டத்திற்கு வந்த ஆண்டுகளும் கீழே காண்பவை. நாயக்கர்களின் ஆட்சி ஏறக்குறைய சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாவது, தொடங்கியிருக்க வேண்டுமென்று நான் குறிப்பிட்டிருந்ததைப் படிப்போர் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

விசுவநாத நாயக்கர் கிபி 1559
குமாரகிருஷ்ணப்ப நாயக்கர்
1563
பெரியவீரப்ப நாயக்கர்
1573
இரண்டாம் விசுவநாத நாயக்கர்
1573
லிங்கைய நாயக்கர்; விசுவப்ப நாயக்கர்
1595
முத்துகிருஷ்ணப்ப நாயக்கர்
1602
முத்துவீரப்ப நாயக்கர்
1609
திருமலை நாயக்கர்
1623
முத்து அழகாத்திரி நாயக்கர்
1659
சொக்கநாத நாயக்கர்
1662
ரங்ககிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர்
1682
மங்கம்மாள் (இராணி, அரசப் பிரதிநிதி)
1689
விசயரங்க சொக்கநாத நாயக்கர்
1704
மீனாட்சி அம்மாள் (இராணி, அரசப் பிரதிநிதி)
1731
சந்தாசாகிபுவின் ஆக்கிரமிப்பு
1736

இதுவரை நாயக்கர் மரபில் புகழ்பெற்ற அரசர் திருமலை நாயக்கர். இவர் 1623 முதல் 1659 வரை அரசு செலுத்தினார். மதுரையில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களினின்றும் அவருக்குக் கட்டடங்கள் கட்டுவதில் விருப்பம் மிகுதி என்பது தெரிகிறது. இதற்குச் சிறந்த சான்றாக இன்றும் சிறப்புற்று விளங்குவது முகம்மதிய பாணியில் கட்டப்பட்ட அவருடைய இடிந்த அரண்மனையேயாகும். இப்போது அரண்மனை என்று வழங்கப்படுவது முதலில் கொலுமண்டபத்தைவிடச் சிறிது சிறப்புடையதாயிருந்தது. அவர்