பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 96

அவர்களது நாட்டில் வாழ்ந்து வந்த ஐரோப்பிய மதபோதகர்கள் அவர்களைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்கள். அதில் நாயக்க மன்னரின் அரசியல் வாழ்வும் தனிப்பட்ட வாழ்வும் ஆராய்ந்து அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே, இக்காலத்து ஐரோப்பிய அறிஞர்களின் முறையான - முறையுள்ள வரையறைப்படி மட்டுமின்றி, ஆணையார்ந்த இந்து முகம்மதிய நூல்களில் கூறப்பட்டுள்ள நீதி முறைப்படியும் நாயக்கர்கள் தங்கள் அரசியற் கடமைகளினின்றும் தவறிவிட்டார்கள் என்பது தெரிகிறது. நாயக்கர் ஆட்சியில் குடி, கொலை, கொள்கை, அநீதி, ஒழுக்கமின்மை, உள்நாட்டுக் குழப்பம் முதலியன மிதமிஞ்சியிருந்தன. எனினும், அரச பீடத்திலிருப்பவர்கள் ஆலயங்கட்கும் தெய்வங்கட்கும் ஏராளமான மானியங்கள், பரிசுகள் முதலியன வழங்கிப் பார்ப்பனர், புலவர் முதலியவர் தங்களைப் புகழ்ந்து பேசச் செய்தார்கள். அதனால், மக்கள் தங்கள் குறைகளை வெளிப்படுத்திக் கொள்ள வசதியின்றிப் பொறுமையாக அவர்களுடைய முறையற்ற ஆட்சியைப் பொறுத்துக் கொண்டே இருந்தார்கள்.

நாயக்கர்களுக்கு முந்திய பரம்பரையில் வந்தவர்களுடைய ஆட்சியைவிட நாயக்கர் ஆட்சி மோசமானது என்று நாம் எண்ணத்தக்க காரணங்கள் இல்லையாதலால், பாண்டிய சோழ அரசர்களின் ஆட்சியின் சிறப்புகளைப் பற்றி உயர்வான எண்ணம் கொள்ள இயலாது. பாண்டிய சோழர் ஆட்சிக் காலத்திலோ அல்லது நாயக்கர்களின் ஆட்சிக் காலத்திலோ, சாலை எதுவும் அமைக்கப்படவில்லை. அக்காலத்தில் சாலைகள் என்று வழங்கப்பட்டவை நாட்டுப்புறங்களின் குறுக்கில் செல்லும் ஒற்றையடிப் பாதைகளே. சில இடங்களில் அவற்றின் இரு புறங்களிலும் மரங்கள் வரிசையாய் இருக்கும். அக்காலத்து மக்களுக்குப் பாலம் என்பது அறியப்படாத ஒரு பொருள். நீதிபதிகளோ இல்லை (இது கால்டுவெல்லின் தமிழிலக்கிய அறியாமையைக் காட்டுகிறது. - ந.ச.). தலைநகரில் மட்டும் அரசனே நீதிமன்றத்தில் பார்ப்பன யோசனையாளர்களின் உதவியால் நீதி வழங்கி வந்தான் (பிற்கால தமிழ் நாட்டின் நிலை - ந.ச). பார்ப்பனர்களுக்கு மட்டும் பள்ளிக் கூடங்கள் இருந்தன. மற்றவர்களுக்கு இல்லை (அதனால் வந்த வினைதான் இன்னும் தீரவில்லை - ந.ச.). வியாபாரம் போற்றி வளர்க்கப்படவில்லை. வியாபாரிகள் செல்வர்களாவதைக் காட்டிக் கொள்ளத் துணியவில்லை. எங்கும் மருத்துவ நிலையம் இல்லை. யாதொன்றிற்கும் முடிவு காண வேண்டுமெனில், அரசனுடைய விருப்பு பொறுப்பின்படியேதான் ஒவ்வொன்றும் முடிவு செய்ய வேண்டும். அல்லது சாதிச் சட்டம் அல்லது வழக்கம் என்ற இரும்புச் சம்மட்டியின் வலிமையால் முடிவு